தீயில் துடித்து மடிந்த சுப்புலட்சுமி! கண்ணீரில் குன்றக்குடி! விளக்கால் ஏற்பட்ட விபரீதம்.. பாகன் கைது
சிவகங்கை : கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி நள்ளிரவு நடந்த தீ விபத்தில் காயம் அடைந்த குன்றக்குடி கோவில் யானை உயிரிழந்த நிலையில், கோவில் நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே யானை உயிரிழந்ததாக பக்தர்கள் புகார் கூறினார். மேலும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்த நிலையில், யானையின் பாகன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. கோவிலுக்கு கடந்த 1971ஆம் ஆண்டு ஆத்தங்குடியைச் சேர்ந்த நகரத்தார் சுப்புலட்சுமி என்ற பெண் யானையை பரிசாக கொடுத்தார்.

கோவில் பராமரிப்பில் யானை வளர்ந்து வந்த நிலையில், அந்த யானையின் வயது 53 ஆக இருந்தது. இருந்தபோதும் மிகவும் உற்சாகமாகவும், சுறுசுறுப்புடனும் இருந்த நிலையில், கோவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது.
மேலும் குன்றக்குடி கோவிலுக்கு வரும் பக்தர்கள், யானை சுப்புலட்சுமிக்கு உணவுகள் வழங்கி, அதனிடம் ஆசீர்வாதம் பெற்றுச் செல்வதும் வழக்கம். மலைக் கோயிலுக்கு செல்லும் பாதைக்கு அருகே இரும்பு சீட் மூலம் பந்தல் அமைக்கப்பட்டு அதில் சுப்புலட்சுமி பராமரிக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால் தகர சீட்டின் உட்பகுதியில் தென்னை ஓலைகளை கொண்டு கொட்டகை அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து சிவகங்கை மாவட்ட வனத்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தினர். அதில் தீ விபத்திற்கு முன்னதாக இரவு யானை சுப்புலட்சுமியை பராமரித்து வந்த கார்த்தி என்ற பாகன் யானையை அடக்குவதற்காக உபயோகிக்கும் அங்குசத்திற்கு விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தியுள்ளார். தொடர்ந்து அந்த விளக்கை அணைக்காமல் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பலத்த காற்றின் காரணமாக விளக்கின் தீ, யானை கட்டி வைக்கப்பட்டு இருந்த கூரையில் பற்றியதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் யானையை மீட்டு கோவில் மடத்திற்கு கொண்டு வந்தனர். யானை சுப்புலட்சுமியை, அதன் பாகன் மூலம் சமாதானப்படுத்தி கோயில் மடத்திற்கு அழைத்து வந்தார். உடல் முழுவதும் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டிருந்த நிலையில் மருத்துவர்கள் மூலம், யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சுப்புலட்சுமி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக கோவிலில் வளர்க்கப்பட்ட வந்த யானை சுப்புலட்சுமி மரணத்தில் அப்பகுதி மக்களுக்கும் பக்தர்களும் கடும் சோகத்தில் மூழ்கினர். தொடர்ந்து அரசு சார்பிலும் பக்தர்கள் சார்பிலும் கண்ணீர் மல்க யானைக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை அடுத்து கோவிலுக்கு அருகே உள்ள நிலத்தில் சுப்புலட்சுமி அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கோவில் நிர்வாகத்தின் அலட்சியம் தான் யானை சுப்புலட்சுமி மரணத்திற்கு காரணம் என குற்றம் சாட்டினர் பக்தர்கள்.
தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள கோவில்களில் வளர்க்கப்படும் யானைகளுக்கு தனியாக கான்கிரீட் கூரை அமைத்து ஷவர் நீச்சல் குளம் என பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் யானை சுப்புலட்சுமியை முறையாக பராமரிக்காமல், தகரக் கொட்டையிலும் தென்னை ஓலை கொட்டகையிலும் பராமரித்து வந்ததாகவும், இதன் காரணமாகவே தீப்பிடித்து கொடூர மரணத்தை சுப்புலட்சுமி சந்தித்து எனவும், இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து சிவகங்கை மாவட்ட வனத்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தினர். அதில் தீ விபத்திற்கு முன்னதாக இரவு யானை சுப்புலட்சுமியை பராமரித்து வந்த கார்த்தி என்ற பாகன் யானையை அடக்குவதற்காக உபயோகிக்கும் அங்குசத்திற்கு விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தியுள்ளார். தொடர்ந்து அந்த விளக்கை அணைக்காமல் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பலத்த காற்றின் காரணமாக விளக்கில் யானை கட்டி வைக்கப்பட்டு இருந்த கூரையில் பற்றியதாக கூறப்படுகிறது.
இதை அடுத்தே யானை தீ விபத்தில் சிக்கி காயம் அடைந்து பலியானதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து யானைப் பாகன் கார்த்தியை கைது செய்த வனத்துறை அதிகாரிகள் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். யானையின் கால்களை சங்கிலியால் கட்டாமல் பாகன் நேரடியாக கவனிக்க வேண்டும். ஆனால் அதனை சங்கிலியால் கட்டி விட்டு வீட்டுக்குச் சென்றதும் கவன குறைவாக இருந்ததும் யானையின் மரணத்திற்கு காரணம் என விசாரணையில் தெரியவந்தது. இதன் காரணமாகவே யானைப்பாகன் கார்த்தியை கைது செய்துள்ளோம் என விளக்கம் அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications