காரைக்குடியில் ஆடு மேய்த்தாலும் விடாத படிப்பு.. டாக்டராகும் ஒரே கிராமத்து அரசுப் பள்ளி மாணவர்கள்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கமலை என்ற கிராமத்தில் பிறந்து ஒரே பள்ளியில் படித்த மாணவர்கள் ஆடு மேய்த்துக் கொண்டே மருத்துவ கனவை எட்டிப்பிடித்துள்ளார்கள். அரசு பள்ளி மாணவர்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாவார்.அவர் மாற்றுத்திறனாளி இட ஒதுக்கீட்டிலும், மற்றொருவர் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டிலும் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு ஏழை மாணவர்களின் 'டாக்டர்' கனவை நினைவாக்கி வருகிறது. கடந்த ஆண்டு 584 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்த நிலையில், இந்த ஆண்டு 622 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.

முன்னதாக நீட் தேர்வு வருவதற்கு முன்பு தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 40-க்கும் குறைவான அரசு பள்ளி மாணவர்களே மருத்துவப் படிப்பில் சேர்ந்து வந்ததாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதேநேரம் நீட் தேர்வுக்கு பின்னர் இந்த எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திற்கு வந்தது. நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவராகும் கனவு வீணாகிவிடக்கூடாது என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து, படிப்புக்கான முழு செலவையும் ஏற்பதாக அறிவித்தது. இத்திட்டம் ஏழை மாணவர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது..
இதன் காரணமாக , 2021ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு பொறியியல், கால்நடை, ஆயுஷ், சட்டம், வேளாண் படிப்புகளுக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை விரிவுபடுத்தியது. இந்த இட ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்விக்கு தற்போது பேருதவியாக இருந்து வருகிறது. நீட் தேர்வுக்கு முன்பு இருந்ததைவிட, அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவு வேகமாக நினைவாகி வருகிறது.
புள்ளி விவரங்களை எடுத்து பார்த்தால், 2020-21-ம் ஆண்டில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின்கீழ் 435 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். 2021-22-ல் 555 பேரும் 2022-23-ல் 584 பேரும் மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். நடப்பு 2023-24-ம் ஆண்டில் 622 பேரும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளார்கள். 496 எம்பிபிஎஸ் படிப்பிலும் 126 பிடிஎஸ் படிப்பிலும் அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
எம்பிபிஎஸ் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு காரணமாக கூலித்தொழிலாளி, வீட்டு வேலை செய்பவர், ஏழை விவசாயி போன்ற சாமானியர்களின் பிள்ளைகள் 622 பேரின் டாக்டர் கனவு இந்த ஆண்டு நிறைவேறியுள்ளது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கமலை என்ற கிராமத்தில் ஒரே பள்ளியில் படித்து, இடஒதுக்கீடு மூலம் ஒரே மருத்துவக் கல்லூரியில் அரசுப் பள்ளி மாணவர்கள் ரவி மற்றும் நாகராஜ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
இதில் மாற்றுத்திறனாளியான நாகராஜ், ஆடு மேய்த்துக் கொண்டு கல்வியிலும் கவனம் செலுத்தி வந்துள்ளார். தற்போது நீட் தேர்வில் 136 மதிப்பெண்கள் பெற்று மாற்றுத்திறனாளி இடஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளத. அதேபோல் நீட் தேர்வில் 592 மதிப்பெண் பெற்ற ரவி, 7.5 சதவீத இடஒதுக்கீடு காரணமாக அதே கல்லூரியில் தேர்வாகி உள்ளார்.
இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் நீட் தேர்வில் 633 மதிப்பெண்கள் பெற்று 7.5% உள் இட ஒதுக்கீட்டில் வென்ற தருண் என்ற மாணவன், மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார். ஆடு மேய்த்துக் கொண்டே ஓராண்டு வீட்டில இருந்து படித்த மாணவன் நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நினைவாக்கி உள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு 28 மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ் மற்றும் 5 மாணவர்கள் பி.டி.எஸ் என 33 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்திருக்கிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications