தமிழ்நாட்ல நாங்க இப்படித்தான்.. மசூதி திறப்பு விழாவை தங்கள் விழாவாக கொண்டாடும் இந்து, கிறிஸ்துவர்கள்

Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: மசூதி திறப்பு விழாவுக்கு இந்துக்கள், கிறிஸ்துவர்களும் வாழ்த்தி பேனர் வைத்து இருக்கும் நிகழ்வு சாலைக்கிராமம் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சாதி, மத அடிப்படையிலான வெறுப்பு பேச்சுக்களும் மத ரீதியிலான மோதல்களும் குற்றங்களும், சிறுபான்மையின மக்களுக்கு எதிரான தாக்குதல்களும் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மாட்டுக்காக மனிதர்களை அடித்துக் கொல்லும் குற்றங்கள், ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதா கி ஜே என்று சொல்ல சொல்லி கும்பல் படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. குறிப்பாக குஜராத், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், ஹரியானா, உத்தராகண்ட் போன்ற வட மாநிலங்களில் இத்தகைய குற்றங்கள் மிகமிக அதிகம்.

Hindus and Christians greet the opening ceremony of the mosque in Sivakangai
இத்தகைய கொடூர குற்றங்கள் தென் மாநிலமான கர்நாடகா வரை தலைவிரித்து ஆட தொடங்கிவிட்ட சூழலிலும் தமிழ்நாடு மதநல்லிணத்துக்கு எடுத்துக்காட்டாகவே திகழ்ந்து கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டிலும் சில பகுதிகளில் சாதி, மதவாத நிகழ்வு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் பிற மாநிலங்களைவிட ஒப்பீட்டு அளவில் மத நல்லிணக்க மண்ணாக இருக்கிறது தமிழ்நாடு. இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என வெவ்வேறு மதங்களை தமிழர்கள் பின்பற்றி வந்தாலும் பெரும்பாலானோர் நாங்கள் மனிதர்களாகவும், தமிழர்களாக நாங்கள் ஒன்று என்று நாட்டுக்கே பாடமெடுத்து வருகின்றனர்.

அண்மையில் சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது சாதி மதம் பார்க்காமல் ஏராளமான இஸ்லாமிய அமைப்புகள் வெள்ளத்தில் இறங்கி நிவாரண பணிகளை மேற்கொண்டார்கள். சென்னையிலும், தென் மாவட்டங்களிலும் மசூதிகள் அனைத்து மதத்தினர் தங்குவதற்காக திறக்கப்பட்டது. அவர்களுக்கு அங்கேயே உணவு சமைத்து வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதேபோன்று ஒரு மதத்தினர் மற்றொரு மதத்தினரின் மதம் சார்ந்த நிகழ்வுகளில் கலந்துகொள்வது, உதவிகளை செய்வது, வாழ்த்துக்களை பரிமாறுவது என மத நல்லிணக்கத்தின் ஊற்றாக திகழ்ந்து வருகிறார்கள். கோயில் கும்பாபிஷேகத்துக்கு வரும் இந்துக்களுக்கு தண்ணீர், குளிர்பானம் வழங்கிய முஸ்லிம்கள், மசூதி திறப்பு விழாவில் சீர்வரிசை செய்த இந்துக்கள் என தினமும் செய்திகள் வெளியாகி மக்களை நெகிழ்ச்சி அடைய வைத்து வருகின்றன.

இதுபோன்ற சம்பவம்தான் சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமம் பகுதியில் நடந்து உள்ளது. அங்கு இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்காக “மஸ்ஜிதே இலாஹி” என்ற பெயரில் மசூதி ஒன்றை கட்டி முடித்து உள்ளனர். இதன் திறப்பு விழா நாளை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பள்ளிவாசல் திறப்பு விழாவுக்கு வாழ்த்து தெரிவித்து சாலைக்கிராமம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் இந்துக்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் பேனர் வைத்து உள்ளனர்.

ஸ்ரீ ஐயப்பா சேவா சங்கம் வைத்து உள்ள பேனரில், “புதிய இறை இல்லத் திறப்பு விழா சிறக்க வாழ்த்துகிறோம்.” என்று குறிப்பிட்டு பள்ளிவாசல் படத்துடன் ராமரும் பாபரும் கட்டிப்பிடிப்பது போன்ற படத்தை அச்சிட்டு உள்ளனர். அதே போன்று சாலைக் கிராமம் புனித சகாய அன்னை ஆலயத்திற்கு உட்பட்ட கத்தோலிக்க கிறித்தவ இறைமக்கள் மற்றும் இளையோர் சார்பில் பள்ளிவாசல் திறப்பு விழாவுக்கு வாழ்த்து பேனர் வைத்து உள்ளனர். அதில், “எங்கள் உறவுகளின் புதிய இறையில்லத் திறப்பு விழாவிற்கு வருகை தரும் அனைவரையும் வருக வருக என அன்புடன் அழைக்கிறோம்.” என்று குறிப்பிட்டு உள்ளனர்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+