திருப்புவனம் அருகே தீ மிதித்து மொகரம் பண்டிகை கொண்டாடிய இந்துக்கள்!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை இந்துக்கள் பள்ளிவாசல் முன்பு தீ மிதித்து மொகரம் பண்டிகையை கொண்டாடினர்.
Recommended Video
திருப்புவனம் அருகே உள்ள முதுவந்திடல் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இக்கிராமத்தில் வாழ்ந்த முஸ்லீம் மக்கள் இங்குள்ள பாத்திமா நாச்சியார் பள்ளிவாசலில் மொகரம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வந்துள்ளனர்.

மத ஒற்றுமை
அதைத்தொடர்ந்து காலப்போக்கில் முதுவந்திடல் கிராமத்திலிருந்து முஸ்லீம் மக்கள் பிற இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர். தற்போது கிராமத்தில் இந்துக்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். இதனால் முதுவந்திடல் கிராமத்தில் முஸ்லீம் மக்கள் கொண்டாடி வந்த மொகரம் பண்டிகையை பல ஆண்டுகளாக மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இந்துக்கள் கொண்டாடி வருகின்றனர்.

தீ மிதித்து நேர்த்திக்கடன்
இதையொட்டி மொகரம் பண்டிகைக்கு முன்னதாக கிராமத்தில் வசிக்கும் இந்துக்கள் பாத்திமா நாச்சியார் பள்ளிவாசல் முன்பு நேர்த்திகடன் நிறைவேற்ற விரதம் தொடங்கினர். மொகரம் பண்டிகை நாளான வெள்ளிக்கிழமை அதிகாலை பாத்திமா நாச்சியார் பள்ளிவாசல் முன்பு வெட்டப்பட்டிருந்த பெரிய பள்ளத்தில் பரப்பி வைக்கப்பட்டிருந்த நெருப்புக் குண்டத்தில் விரதம் இருந்து வந்த இந்துக்கள் வரிசையாக நின்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இந்து மக்கள்
பெண்கள் தலையில் துணியால் முக்காடு போட்டுக் கொண்டு நெருப்புக் கங்குகளை தலையில் அள்ளிக் கொட்டிக் கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்துக்கள் மொகரம் பண்டிகை கொண்டாடப்படுவது குறித்து கிராம மக்கள் கூறுகையில், முதுவந்திடல் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்துக்களும் முஸ்லிம்களும் மத வேற்றுமையை மறந்து ஒற்றுமையாக வாழ்ந்து வந்துள்ளனர். அதன்பின் கிராமத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேறியதால் அவர்கள் கொண்டாடி வந்த மொகரம் பண்டிகையை இந்து மக்கள் விடாமல் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம்.

தொடர்கிறது
மொகரம் பண்டிகை அன்று தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக முன்னதாகவே கிராம மக்கள் விரதம் தொடங்கி விடுவோம். மொகரம் பண்டிகை அன்று சூரிய உதயத்திற்கு முன்பு அதிகாலைப் பொழுதில் பாத்திமா நாச்சியார் பள்ளிவாசல் முன்பு ஆண்கள் தீ மிதித்தும் பெண்கள் தலையில் நெருப்புக் கங்குகளை கொட்டிக்கொண்டும் வேண்டுதல் நிறைவேற்றுவது என்பது வழக்கமாக நடந்து வருகிறது என்றனர்..!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications