"உயர் ஜாதி கட்சி" பாஜக ஆட்சிக்கு வந்தால் கிடா வெட்டு வழிபாடுக்கு தடை போடுவாங்க: கார்த்தி சிதம்பரம்
சிவகங்கை: நான் சொன்னது போலவே பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக கிடாவெட்டி, சேவலை நேர்த்திக்கடனாக கொடுப்பதை தடை செய்வார்கள் என சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் ட்வீட் போட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை சுட்டிக்காட்டி கார்த்தி சிதம்பரம் இதனை கூறியுள்ளார்.
சிவகங்கையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்தியா கூட்டணி சார்பில் லோக்சபா தொடர்பாக தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம் பேசுகையில், "வரும் தேர்தல், லோக்சபா வேட்பாளரை மட்டும் தேர்ந்தெடுக்கும் எலெக்சன் அல்ல. நமது கலாசாரத்தை பாதுகாக்க வேண்டிய தேர்தல்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கிடா வெட்டி சாமி கும்பிட தடை போடுவார்கள். நமது பழக்கவழக்கங்களுக்கு தடை போட்டுவிட்டு, சமஸ்கிருதம், மேல்தட்டு முறைகளில்தான் வழிபாடு நடத்த வேண்டும் என சொல்வார்கள்.
கடந்த 10 வருடத்தில் நம்முடைய வருமானம் கூடாமல், செலவு அதிகரித்துள்ளது. இதுதான் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் அவலநிலை. இந்தியாவில் உள்ள 140 கோடி பேரும் வரி கட்டுகின்றனர். இந்தியாவில் வரி கட்டாத ஆட்களே கிடையாது. ஆனால், தமிழக மக்கள் கட்டும் வரி பணம், வடமாநிலத்தில் செலவு செய்யப்படுகிறது. இந்த நிலை மாறணும். தமிழகத்திற்கு அதிக நிதி கிடைக்க வேண்டும் என்றால் மத்தியில் ஆட்சி மாற்றம் வர வேண்டும்.
நமது நாட்டில் தற்போது மாநிலத்தின் முதல்வர்களை கைதுசெய்து பயமுறுத்துகின்ற அசாதாரண சூழல் நிலவுகிறது. தமிழக அரசிற்கு பாதுகாப்பு வேண்டும் என்றால், அதனை சார்ந்துள்ள அரசு (காங்கிரஸ் அரசு) மத்தியில் அமைய வேண்டும். தமிழக அரசின் 4 முத்தான திட்டங்கள் தொடர வேண்டும் என்றால், கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்" இவ்வாறு கார்த்தி ப சிதம்பரம் பேசியிருந்தார்.

இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீரில் நடந்த பிரச்சாரத்தில் பேசுகையில், புனிதமான சாவன் மாதத்தில் ஆட்டிறைச்சியை சமைத்து சாப்பிட்டு, பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை எதிர்க்கட்சியினர் புண்படுத்துகின்றனர்" என்று கூறியிருந்தார்.
இதனை சுட்டிக்காட்டி ட்வீட் போட்டிருக்கும் சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி ப சிதம்பரம், நான் சொன்னது போலவே.. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக கிடாவெட்டி, சேவலை நேர்த்திக்கடனாக கொடுப்பதை தடை செய்வார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். பாஜக வட இந்திய மேல்சாதி சமஸ்கிருத சைவ "இந்துத்துவா" என்று பிரச்சாரம் செய்கிறது, இது கிராமப்புற தென்னிந்திய நம்பிக்கை நடைமுறையில் இருந்து மிகவும் வேறுபட்டது என்றும் கார்த்தி சிதம்பரம் ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ஆடுகள், கோழிகள் வெட்டக்கூடாது என்ற ஒரு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதே இல்லை 2001-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந்து, ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, அந்த சட்டத்தை செயல்படுத்துமாறு கடந்த 2003ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார்.
இது தொடர்பாக அன்றைக்கு ஜெயலலிதா விடுத்த அறிவிப்பில், கோவில்கள் மற்றும் கோவில்களைச் சுற்றிலும் ஆடுகள், மாடுகள், கோழிகள் ஆகியவற்றை பலியிடக்கூடாது என்று தமிழ்நாடு விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டம் 1950 மற்றும் திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.இருப்பினும் இந்த செயல்கள் தொடர்ந்து கொண்டுள்ளன. இனிமேல் கோவில்களில் தெய்வத்திற்கு பலியிடுதல் என்ற பெயரில் ஆடுகள் மற்றும் பறவைகளை படுகொலைசெய்யக் கூடாது. அதுபோன்ற செயல்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இதனை செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஜெயலலிதா கடந்த 2003ம் ஆண்டு கூறியிருந்தார்.
இதனிடையே கோவில்களில் ஆடுகள், கோழிகள் வெட்டக்கூடாது என்ற உத்தரவிற்கு பக்தர்களிடமிருந்தும், பொது மக்களிடமிருந்தும், கடும் எதிர்ப்புக்குரல் வந்தது. அந்த உத்தரவை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் வைத்தார்கள். இதையடுத்து மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அந்த உத்தரவு விலக்கிக் கொள்ளப்படுவதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அன்று அறிவித்தார். இது தான் தமிழகத்தில் அன்று நடந்த சம்பவம் ஆகும்.
-
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக்












Click it and Unblock the Notifications