எனக்கு மரியாதை இல்லையா? கோபித்து வெளியேறிய திமுக எம்எல்ஏ! தேடிப்போய் சமாதானம் செய்த செல்வபெருந்தகை
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் சட்டசபை பொது கணக்கு தணிக்கை குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ‛‛எனக்கு மரியாதை இல்லையா'' என்று கோபித்து வெளியே சென்ற திமுக எம்எல்ஏ எழிலனை தேடிப்போய் காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை சமாதானம் செய்ததோடு, கலெக்டரை கடிந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக சட்டசபையில் பொது கணக்கு தணிக்கை குழு உள்ளது. இந்த குழுவின் தலைவராக காங்கிரஸ் தலைவரும், எம்எல்ஏவுமான செல்வபெருந்தகை உள்ளனர். இந்த குழுவில் பிற கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த பொது கணக்கு தணிக்கை குழுவினர் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வ மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று சிவகங்கை மாவட்டத்துக்கு சட்டசபை பொது கணக்கு தணிக்கை குழுவினர் சென்றனர்.
செல்வபெருந்தகை தலைமையில் காஞ்சிபுரம் எம்எல்ஏ ஏழிலரசன் (திமுக), நாகப்பட்டினம் எம்எல்ஏ ஆளூர் முகமது ஷாநவாஸ்(விசிக), போளூர் எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தி (அதிமுக) உள்ளிட்டவர்கள் வந்தனர். காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் பழனியப்ப செட்டியார் நினைவு கலையரங்க வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தமிழ் நூலகத்தை அவர்கள் பார்வையிட சென்றனர்.
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும் இருக்கும் ப சிதம்பரம் தனது அம்மா லட்சுமி நினைவாக சொந்த பணமான ரூ.12 கோடியில் இந்த நூலகத்தை கட்டி கொடுத்துள்ளார். லட்சுமி வளர் தமிழ் நூலகம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த நூலகத்தை சில நாட்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த நிலையில் சட்டசபை பொது கணக்கு தணிக்கை குழுவினர் பார்வையிட சென்றனர்.
அப்போது செல்வபெருந்தகையுடன் சென்ற காஞ்சிபுரம் திமுக எம்எல்ஏ எழிலரசனை யாரும் கண்டுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. செல்வபெருந்தகை, ஆளூர் முகமது ஷா நவாஸ், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டவர்கள் வேகமாக நூலகத்துக்குள் நுழைந்தனர். ஆனால் பின்தங்கிய திமுக எம்எல்ஏ எழிலரசன் தன்னை ஒதுக்குவதாக நினைத்தார். இதனால் அவர் கோபித்து கொண்டு வெளியே சென்றார். செல்வபெருந்தகை அவரை நிற்க கூறியும் எழிலரசன் கண்டுக்கொள்ளாமல் வெளியேறினார்.
அதன்பிறகு ஏழிலரசன் நூலகத்துக்குள் வராமல் வெளியவே நின்றார். இதனால் வேறு வழியின்றி செல்வபெருந்தகை நூலகத்துக்கு வெளியே சென்று ஏழிலரசனை சமாதானம் செய்தார். அப்போது அங்கு நின்ற கலெக்டர் ஆஷாவை அவர் கடிந்து கொண்டார். ‛‛அனைத்து வேலைகளையும் விட்டு விட்டு இங்கு வந்துள்ளோம். அதற்கான மரியாதையை தர வேண்டும்'' என்று காட்டமாக பேசினார். அதன்பிறகு சமாதானம் அடைந்த திமுக எம்எல்ஏ எழிலரசன் நூலகத்துக்குள் சென்றார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications