விடிய விடிய பரபரப்பு.. இப்போ இல்லை.. 2045-ல்தான் ஜீவசமாதி ஆவேன்.. இருளப்ப சாமியின் திடீர் அறிவிப்பு
ஜீவசமாதி அடைய போவதில்லை என்று இருளப்பசாமி அறிவித்துள்ளார்
Recommended Video
சிவகங்கை: பெரிய குழி தோண்டப்பட்டிருந்த நிலையில்.. விடிய விடிய மக்கள் பரபரப்புடன் காணப்பட்ட நிலையில்.. திடீரென தான் ஜீவசமாதி அடைய போவதில்லை என்று இருளப்பசாமி அறிவித்துள்ளார்
கிராமத்தை சேர்ந்தவர்தான் இருளப்பசாமி. 80 வயதாகிறது. சின்ன வயசில் இருந்து இவர் ஒரு சிவ பக்தர்! எந்த சிவன் கோயில்களானாலும் சரி.. எல்லா இடத்துக்கும் இவர் நடந்துதான் போவாராம். கல்யாணமாகி, குடும்பத்துடன், இதே கிராமத்தில்தான் வசித்து வருகிறார்.
நேத்து ராத்திரி அதாவது செப்டம்பர் 12ம் தேதி, 12 மணியில் இருந்து விடிகாலை 5 மணிக்குள் ஜீவசமாதி அடைய இருப்பதாகவும், அதன் பிறகு அன்றே சமாதி எழுப்ப வேண்டும் என்றும் திடீர் அறிவிப்பினை இவர் வெளியிட்டிருந்தார்.

அதிர்ச்சி
இப்படி ஜீவசமாதி அடைய வேண்டும் என்று சிவபெருமானே தனது கனவில் வந்து சொன்னதாகவும் அவர் காரணம் தெரிவித்திருந்தார். இது சம்பந்தமான போஸ்டர்கள் ஊரெல்லாம் ஒட்டப்பட்டன. இருளப்பசாமியின் இந்த அறிவிப்பினால் மக்கள் ஆச்சரியம், அதிர்ச்சியும் அடைந்தனர்.

தற்கொலைதான்
இந்த செய்தி சோஷியல் மீடியாவிலும் வைரலானது. இதையடுத்து, இப்படி ஜீவசமாதி அடைவது சட்டப்படி தவறு என்றும், அதுவும் ஒருவகையில் தற்கொலைதான் என்றும், மதகாரணங்களை சொல்லி இதிலிருந்து தப்பிவிட முடியாது என்றும் எதிரான கருத்துக்கள் மற்றொரு பக்கம் பரவ தொடங்கின.

பெரிய குழி
நேரத்தை குறிப்பிட்டு சொல்லிவிடவும், ஜீவசமாதியை பார்க்க வேண்டும் என்பதற்காக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், பாசங்கரை கிராமத்தில் குவிய ஆரம்பித்தனர். சொன்னபடியே, குறிப்பிட்ட நேரத்தில் இருளப்பசாமி வந்து உட்கார்ந்தார், அவருக்கு முறையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.. தீபாராதனைகள் காட்டப்பட்டன. இருளப்பசாமிக்காக பெரிய குழி ஒன்றும் தோண்டப்பட்டு உள்ளது.

ஒத்திவைப்பு
ஆனால், இன்று விடிகாலை 5.45 மணிக்கு ஜீவசமாதி அடையும் முடிவை இருளப்பசாமி ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். சமாதி கட்டும் பணிகள் இன்னும் முடிவடையவில்லை என்று காரணம் தெரிவித்துள்ளார். ஜீவசமாதிக்காக பெரிய குழி தோண்டப்பட்டிருந்த நிலையில், காலையில் அந்த நிகழ்வு ஒத்திவைக்கப்படுவதாக "2045-ல் அதே இடத்தில் ஜீவசமாதி அடைவேன். அது வரை இப்படியே தொடர்ந்து தவம் மேற்கொள்வேன். நேரம் தவறிவிட்டதால், இப்போது என்னால் ஜீவ சமாதி அடைய முடியவில்லை" என்று கூறியுள்ளார்.
2045 என்றால், இருளப்பசாமிக்கு 106 வயசு ஆகும் என்று தெரிகிறது!












Click it and Unblock the Notifications