வாரத்தில் 6 நாள் அசைவம் தான் சாப்பிடுவேன்! 1 நாள் தான் சைவம்! கார்த்தி சிதம்பரம் ஓபன் டாக்!
சிவகங்கை: வாரத்தில் 6 நாட்கள் அசைவம் தான் சாப்பிடுவேன் என்றும் ஒரு நாள் மட்டுமே சைவம் சாப்பிடுவேன் எனவும் கூறியிருக்கிறார் கார்த்தி சிதம்பரம் எம்.பி.
சாப்பாடு விஷயத்தில் மட்டும் தனக்கு சமரசமே கிடையாது என்பதை அவர் இதன் மூலம் உணர்த்தியுள்ளார். தனது வீட்டில் சமைக்கும் சமையல் கலைஞர்கள் அனைவரும் செட்டிநாடு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்டவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

முட்டையில் பிரட்டி எடுத்த சிக்கன் சாப்ஸ் தனக்கு மிகவும் பிடித்த டிஷ் என்றும் அசைவம் இல்லாமல் அன்றைய பொழுது கழியாது எனவும் தெரிவித்துள்ளார். அதேவேளையில் அசைவம் என்றால் ஃபுல் கட்டு கட்டமாட்டேன் என்பதையும் எல்லா வகைகளிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துக் கொள்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.
செட்டிநாடு பகுதியில் மட்டுமே பிரபலமான கோஷ்மல்லி வகை கிரேவியை தனது வீட்டில் வாரத்திற்கு 2 நாட்களாவது வைத்துவிடுவார்கள் எனவும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். காரைக்குடி பகுதியில் நடக்கும் திருமண வீடுகளுக்கு சென்றால் அங்கு கவனிக்கும் கவனிப்புகளே தனியானது என்றும் வேறு பகுதிகளில் செட்டிநாடு திருமணங்களுக்கு இணையான விருந்தோம்பலை தாம் பார்த்ததில்லை எனக் கூறியுள்ளார்.
சிக்கன், மட்டன், மீன், என அசைவ உணவு வகைகளில் எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லாவற்றையும் சாப்பிடக் கூடிய ஆள் தாம் என்று கூறியுள்ளார். தனக்கு காய்ச்சலோ உடல் வலியோ ஏற்பட்டால் நண்டு சூப்பும், கோழி ரசமும் சாப்பிடுவேன் என்பதையும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பொதுவாக சாப்பாடு விவகாரத்தை பற்றி எந்த அரசியல்வாதியும் பெரிதாக பொதுவெளியில் பேசமாட்டார்கள். காரணம் தேவையற்ற விமர்சனங்கள் வரும் என்பதேயாகும். ஆனால் கார்த்தி சிதம்பரத்தை பொறுத்தவரை எதிலுமே தடாலடியான நபர் என்பதால் சாப்பாடு விவகாரத்திலும் ஒளிவுமறைவின்றி ஓபனாக பேசியிருக்கிறார்.
சமையல் கலை என்பது என்றுமே அழியாத கலை என்றும் செட்டிநாடு பகுதியை சேர்ந்த சமையல் கலைஞர்களை விமானத்தில் டிக் புக் செய்து அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று சமைக்க வைக்கிறார்கள் எனவும் கூறினார்.












Click it and Unblock the Notifications