படு எளிமை, வெகு இயல்பு... செல்போன் கூட போன வாரம்தான் வாங்கினாராம்.. ஆச்சரிய இலக்கியதாசன்!
மானாமதுரை திமுக வேட்பாளர் இலக்கியதாசன் மிகவும் எளிமையால் அனைவரையும் கவர்கிறார்.
Recommended Video

சென்னை: நாட்டில் இருக்கும் வேட்பாளர்களிலேயே ரொம்பவும் எளிமையானவர் யார் தெரியுமா? மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளர் இலக்கியதாசன்தான்!
இப்போது 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வர போகிறது. இதில் திமுக தரப்பில் கரு காசிலிங்கம் (எ) இலக்கியதாசன்தான் களமிறங்க போகிறார்.
இவர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லையாம். தேர்தலில் எந்த முன் அனுபவமும் இல்லை, என்றும் பின்தங்கிய பொருளாதாரத்தை சேர்ந்தவர் என்றும் சொல்லப்படுகிறது.
இவருக்கு வயது 65 ஆகிறது.

இலக்கிய அணி
சிவகங்கை மாவட்ட இலக்கிய அணி பொறுப்பாளராக இருக்கிறார். விவசாயமும் செய்கிறார். எம்.ஏ., பி.எச்.டி. முடித்துள்ளார். ஆனால் இவருக்கென்று சில தினங்களுக்கு முன்பு வரை செல்போன் கிடையாதாம்.

செல்போன் இல்லை
செல்போன் கூட இல்லாத வேட்பாளர் என்றே ஃபேமஸ் ஆனவர் இவர். இவரிடம் யாராவது பேச வேண்டும் என்றால் வீட்டில் உள்ளவர்களுக்குதான் போன் செய்ய முடியும். இவராகவும் யாருக்கும் போன் செய்வது கிடையாது. வெளியில் எங்காவது கிளம்பி சென்றால், மனைவியிடம் சொல்லிவிட்டு கிளம்புவாராம்.
18 தொகுதி இடைத்தேர்தல்.. யார் யாருக்கு இடையில் போட்டி.. மாஸ் லிஸ்ட் இதோ!

மனைவிக்கு தெரியும்
இப்போது திமுக சார்பில் இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இப்போதும் செல்போன் இல்லாமலேயே இருக்க போகிறீர்களா என்று கேட்டால், "நான் யார்கூட இருக்கிறேன் என்பது என் மனைவிக்கு தெரியும். ஏதாவது பேச வேண்டும் என்றால், அவங்களுடைய செல்போன் நம்பருக்கு கூப்பிட்டு பேசுவார்கள். ஆனா இனிமேல் இப்படி இருக்க முடியாது போல இருக்கு. என் கட்சி தொண்டர்களுக்காகவும், தொகுதி மக்களுக்காகவும் சீக்கிரமாகவே செல்போன் வாங்க போறேன்" என்றார்.

சொந்தமாக செல்போன்
இப்படி சொன்னதுடன் நிற்காமல், ஒரு செல்போனையும் தன் பெயரில் சொந்தமாக வாங்கி உள்ளாராம். பார்க்கவே ரொம்பவும் எளிமையான தோற்றம்.. இயல்பான பேச்சு.. தான் இவரது ஸ்பெஷாலிட்டியே!
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications