மலேசியாவிற்கு வேலைக்கு சென்ற இளைஞர்.. காத்திருந்த அதிர்ச்சி.. மீட்டுத்தர தாய் கண்ணீர் மல்க கோரிக்கை
சிவகங்கை: மலேசியப் போதைப் பொருள் கும்பலிடம் விற்கப்பட்ட தனது மகனை மீட்டுத் தர கோரி அவரது தாய் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
Recommended Video
சிவகங்கை அருகே உள்ள முத்துபட்டிபுதூர்யை சேர்ந்தவர் கண்ணன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது இளைய மகன் ஆனந்த் (20). இவர் கடந்த வருடம் மலேசியாவில் கோவில் வேலைக்குக் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்த ஏஜென்ட் சரவணன் மூலமாக ரூ.80 ஆயிரம் செலவு செய்து மலேசியாவிற்குச் சென்றுள்ளார்.

ஆனால் அங்குச் சென்ற ஆனந்த்திற்கு கோவில் வேலை வழங்காமல் அங்கு உள்ள போதைப் பொருள் கும்பலிடம் இளைஞர் விற்கப்பட்டுள்ளார். இதை இளைஞர் தனது குடும்பத்திற்கு வாட்ஸ்அப் மூலம் தெரிவித்துள்ளார். அதை அப்போதைய சிவகங்கை காவல் துறை கண்காணிப்பாளர் ரோகித் நாதனிடம் ஆனந்தின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
அவர் தமிழ்நாடு காவல் துறைத் தலைவரிடம் புகார் செய்து அந்த இளைஞரை, மலேசியா காவல் துறையினர் மீட்டு அங்கு உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர். தற்போது அந்த இளைஞரை மீட்டு தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது தாயார் மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டியிடம் கண்ணீர் மல்க மனு ஒன்றைக் கொடுத்துள்ளார்.
அது மட்டும்யின்றி தனது மகனை மீட்டுத் தர வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளார். மலேசியாவில் உள்ள தன்னுடைய மகனை மீட்டுத் தர வேண்டும் என்று அவர் உருக்கமாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பார்ப்பவர்கள் கண்களைக் கண் கலங்க வைத்துள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications