மானாமதுரையில் பரபரப்பு.. தலித் இளைஞர்கள் மீது மர்மகும்பல் தாக்குதல்.. போலீசார் குவிப்பு!
சிவகங்கையில் தலித் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
சிவகங்கை: தெருவில் நின்று செல்போன் பார்த்து கொண்டிருந்த 2 தலித் இளைஞர்களை, மர்ம கும்பல் ஒன்று அரிவாளால் வெட்டி தப்பி ஓடிவிட்டது... இதனால் மானாமதுரையில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மானாமதுரையில் உள்ள கிருஷ்ணராஜபுரம் தெருவை சேர்ந்தவர் சதீஷ். இவருக்கு வயது 25. இவருடைய நண்பர் பெயரும் சதீஷ். அவருக்கும் வயது 25!

இவர்கள் இருவரும் கிருஷ்ணராஜபுரம் தெருவில் உள்ள சாலையின் அருகே நண்பர்களுடன் சேர்ந்து செல்போன் பார்த்து கொண்டே பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் 4 இளைஞர்கள் கொண்ட கும்பல் ஒன்று வந்தது.
இரண்டு சதீஷையும் அரிவாளால் விரட்ட தொடங்கினர். இதனால் இருவருமே பதறி அடித்து தலைதெறிக்க ஓடினார்கள். ஆனால், அந்த கும்பல் இவர்களை விரட்டி வெட்டி தப்பி ஓடிவிட்டது. வெட்டுப்பட்ட இருவரும் ரத்த வெள்ளத்தில் ரோட்டிலேயே சரிந்து விழுந்தனர்.
இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு மானாமதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை தந்து, பிறகு, அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி ரோஹித் நாதன் நேரடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பார்வையிட்டார். இதையடுத்து அவரது தலைமையிலான 100க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கபட்டுள்ளனர். தப்பி சென்ற குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. எனினும், இப்போதைக்கு மானாமதுரையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications