உச்சிக்கேறிய போதை.. இரவில் வீடு புகுந்து ஒடிசா பெண்ணை சீரழித்த 5 பேர் கும்பல்.. அலறும் சிவகங்கை
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கணவரை இழந்த ஒடிசாவை சேர்ந்த 2 பெண் தனது 2 குழந்தைகளுடன் செங்கல்சூளையில் வேலை செய்து வரும் நிலையில் அவரை 5 பேர் கொண்ட கும்பல் குடிபோதையில் வீடு புகுந்து பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பூக்குளம் கிராமத்தில் உள்ள செங்கல்சூளை ஒன்றில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் கடந்த 7 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். இவர் தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் தான் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்து ஒன்றில் அந்த பெண்ணின் கணவர் இறந்துபோனார். இதையடுத்து அந்த பெண் தனது 2 குழந்தைகளுடன் பூக்குளம் கிராமத்திலேயே தங்கி வேலை செய்து வந்தார்.
இதற்கிடையே தான் ஆதி என்பவர் அந்த பெண்ணுடன் பழகியுள்ளார். முதலில் நட்பாக இருவரும் பழகியுள்ளனர். அதன்பிறகு இந்த நட்பு என்பது இன்னும் நெருக்கமாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தததாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஒடிசா பெண்ணுடன் பழகிய ஆதிக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி மதுபோதையில் பெண்ணை சந்திப்பதையும் வழக்கமாக்கி உள்ளார். இந்நிலையில் தான் நேற்று இரவு ஆதி தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து மதுபானம் குடித்துள்ளார்.
அதன்பிறகு அவர் நள்ளிரவு சுமார் 12 மணியளவில் அந்த பெண்ணின் வீட்டுக்கு தனது நண்பர்கள் 4 பேருடன் சென்றுள்ளார். ஆதி தனது 4 நண்பர்களுடன் அங்கு வந்திருப்பதை அறிந்து அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் வீட்டில் இருந்து செல்லும்படி அந்த பெண் கூறியுள்ளார். ஆனால் ஆதியும், அவரது நண்பர்களும் கேட்கவில்லை.
அதோடு தங்களுடன் உல்லாசமாக இருக்கும்படி அவர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளதோடு, வீட்டில் இருந்து அனைவரும் வெளியே செல்லும்படி கூறியுள்ளார். ஆனால் போதையில் இருந்த அவர்கள் அதனை ஏற்கவில்லை. மாறாக வீட்டு கதவை அடைத்து அவர்கள் அந்த பெண்ணுக்கு இரவு முழுவதும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த பெண் கெஞ்சியும் கூட அவர்கள் மனம் இறங்கி வராத நிலையில் அதிகாலையில் அவரது வீட்டை விட்டு அவர்கள் சென்றுள்ளனர். இதனால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளான ஒடிசா பெண் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து மானாமதுரை போலீசில் புகார் செய்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே தான் ஆதி மற்றும் அவரது நண்பர்களை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்தனர். இந்த தனிப்படை போலீசார் தற்போது ஒருவரை கைது செய்துள்ள நிலையில் மீதமுள்ள 4 பேரை தீவிரமாக டி வருகின்றனர். ஒடிசாவில் இருந்து பிழைப்பு தேடி வந்து கணவரை இழந்து செங்கல்சூளையில் 2 குழந்தைகளுடன் வேலை செய்து வரும் பெண்ணை இந்த கும்பல் பலாத்காரம் செய்திருப்பது தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications