Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேஷன் கடையில் 50 மி.லி மட்டுமே மண்ணெண்ணெய் விநியோகம்.. சிவகங்கை அருகே மக்கள் அதிர்ச்சி!

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கை அருகே ரேஷன் கடையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 ரூபாய்க்கு 50 மி.லி மண்ணெண்ணெய் மட்டுமே விநியோகிக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் பொருட்களை வழங்கும் நோக்கில் ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. கோதுமை, பருப்பு, பாமாயில் சமையல் எண்ணெய், உப்பு உள்ளிட்ட பொருட்கள் மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Ration shop Kerosene Sivagangai

அதேபோல, கேஸ் சிலிண்டர் இல்லாதவர்களுக்கும், ஒரு சிலிண்டர் இணைப்பு மட்டுமே வைத்திருப்பவர்களுக்கும் ரேஷன் கடைகள் மூலமாக மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் மண்ணெண்ணெயின் விலை ரூ.16.50 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே மண்ணெண்ணெய் பற்றாக்குறை காரணமாக தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் விநியோகம் குறைந்துள்ளது. இதனால் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 2 முதல் 3 லிட்டர் வரை மண்ணெண்ணெய் வழங்கப்படு வந்த நிலையில் கடந்த ஆண்டில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே வழங்கப்பட்டது.

தற்போது மண்ணெண்ணெய் வழங்குவதை மத்திய அரசு வெகுவாகக் குறைத்துள்ளதால் மண்ணெண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், தற்போது கிராமப்புறங்களில் சிலிண்டர் பயன்படுத்தாதவர்களுக்கு மட்டும் அரை லிட்டர் மண்ணெண்ணெய் வழக்கம்போல் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இதனால், கிராமப்புறங்களில் மக்கள், மண்ணெண்ணெய் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வெறும் 50 மி.லி மட்டுமே மண்ணெண்ணெய் வழங்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி நியாய விலைக் கடையில் 950 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில், அங்கு வெறும் 38 லிட்டர் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அரை லிட்டராக வழங்கினால் ஏராளமானோருக்கு மண்ணெண்ணெய் கிடைக்காமல் போகும் என்பதால் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் பிரித்து வழங்கியுள்ளார் ரேஷன் கடை ஊழியர்.

எங்களுக்கு கிடைக்கவில்லை என மக்கள் சண்டை போடுவார்கள் என்பதால் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்க நினைத்து, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மண்ணெண்ணெய் சமமாக பிரித்து வழங்க முடிவு செய்த ரேஷன் கடை பணியாளர், ஒவ்வொருவருக்கும் இரண்டு ரூபாய்க்கு 50 மில்லி அளவு மண்ணெண்ணெய் விநியோகம் செய்துள்ளார்.

ரேஷன் கடைக்கு மண்ணெண்ணெய் வாங்கச் சென்ற குடும்ப அட்டை தாரர்கள் 2 ரூபாய் கொடுத்து வெறும் 50 மி.லி மண்ணெண்ணெய்யை பாட்டில்களில் ஏமாற்றத்துடன் வாங்கிச் சென்றனர்.

இந்த மண்ணெண்ணெய்யை வைத்து விளக்கெரிக்க முடியுமா? விறகு எரிக்க முடியுமா? என மக்கள் புலம்பியபடி வாங்கிச் சென்றனர். இச்சம்பவத்தை ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டார். தற்போது அந்தக் காட்சிகள் பரவி வருகின்றன.

2021 ஆம் ஆண்டு 8,500 கிலோ லிட்டர் மத்திய அரசு கொடுத்து வந்தது. 2022 ஆம் ஆண்டு 4,500 கிலோ லிட்டராக குறைத்தது. தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் மண்ணெண்ணையை, மத்திய அரசு 2,300 கிலோ லிட்டர் ஆக குறைத்துள்ளதாகவும், மண்ணெண்ணெய் தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+