சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிவகங்கை யாருக்கு போக போகிறது.. பயில்வான் அதிமுகவுக்கா? பலவீன பாஜகவுக்கா!

சிவகங்கை தொகுதியில் போட்டியிட போவது அதிமுகவா? பாஜகவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு தொகுதியில் எதிர்க்கட்சிகளுக்குள் போட்டி இருக்கலாம்.. ஆனால் கூட்டணி கட்சிகளுக்குள்ளேயே போட்டி இருக்குமா? போகிற போக்கில் அப்படித்தான் இருக்க போகிறது சிவகங்கை தொகுதி.

சிவகங்கை தொகுதியை பொறுத்தவரை 9 முறை காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி ஆகும். இந்த முறை திமுக தரப்பில் அதாவது கூட்டணி சார்பாக காங்கிரஸ்தான் களமிறக்க வாய்ப்பு அதிகம்.

ஆனால் அதிமுக தரப்பில் எதிர்த்து போட்டியிட போவது யார் என்று பார்த்தால், இப்போதைய சிட்டிங் எம்பி செந்தில்நாதன் என்று சொல்லப்படுகிறது. இவர் மிகவும் எளிமையானவர். தொண்டர் யாராக இருந்தாலும் அவர் வீட்டுக்கே போன் செய்து உரிமையுடன் பேசுபவர் இவர்.

இதை செய்தால்தான் பாஜகவை சமாளிக்க முடியும்.. மீண்டும் சேரும் எதிர்க்கட்சிகள்.. முக்கிய திட்டம்!இதை செய்தால்தான் பாஜகவை சமாளிக்க முடியும்.. மீண்டும் சேரும் எதிர்க்கட்சிகள்.. முக்கிய திட்டம்!

பிஆர் செந்தில்நாதன்

பிஆர் செந்தில்நாதன்

தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் சாதி பலமும் உள்ளது. முக்கியமாக கட்சியை எந்தவித சிக்கலும் இல்லாமல் ரொம்ப திறம்பட நடத்தி செல்பவராம். அதனால் இந்த முறையும் இங்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டு பி.ஆர்.செந்தில்நாதன் மனு செய்துள்ளார்.

பாஜக தலைமை

பாஜக தலைமை

இப்போது சிக்கல் என்னவென்றால், இதே தொகுதியைதான் எச்.ராஜா கேட்டுக் கொண்டிருக்கிறாராம். இதற்கு காரைக்குடி எச்.ராஜாவின் சொந்த ஊர் என்பது மட்டுமே காரணமாக இருக்கும் என்று தெரிகிறது. ஆனாலும் பாஜக தலைமையிடம் பேசி இந்த தொகுதியைதான் வேண்டும் என்று அடம்பிடித்து வருகிறாராம்.

போட்டியிடுவேன்

போட்டியிடுவேன்

இரு தினங்களுக்கு முன்புகூட சிவகங்கை தொகுதியில் போட்டியிடுவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "தலைமை எந்த முடிவு எடுத்தாலும்நான் கட்டுப்படுவேன், கட்சி வாய்ப்பளித்தால் சிவகங்கை தொகுதியில் போட்டியிடுவேன்" என்று எச்.ராஜா சொல்லி இருந்தார்.

ஆள் இல்லை

ஆள் இல்லை

ஆனால் பாஜகவுக்கு ஒரு பிரச்சனை என்னவென்றால், இந்த தொகுதியின் கிராமப்புறங்களில் தேர்தல் வேலைகளை பார்க்ககூட ஆள் கிடையாதாம். ஒருவேளை எச்.ராஜா நிறுத்தப்பட்டாலும், கூட்டணியை கட்சியைதான் நம்பி இங்கு களமிறங்க முடியும்.

வெல்வது சுலபம்

வெல்வது சுலபம்

இப்போது சிவகங்கை யாருக்கு போக போகிறது? அதிமுகவுக்கா? பாஜகவுக்கா என்பதுதான் பெரிய பிரச்சனையாக உள்ளது. ஒருவேளை அதிமுக நேரிடையாக நின்றால், தேர்தல் களம் சூடாகவும், விறுவிறுப்பாகவும், கடினமாகவும் இருக்கும். ஆனால் இதுவே எச்.ராஜாவுக்கு ஒதுக்கப்பட்டால், காங்கிரஸ் ரொம்ப ரொம்ப ஈசியாகவே ஜெயித்துவிடும் என்றே சொல்லப்படுகிறது.

English summary
PR Senthilnadhan in ADMK or H Raja in BJP may contest in Sivagangai Constitution
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X