Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வயிறெரிஞ்சு சொல்கிறேன்.. கொல்லங்குடி காளிக்கு காசு வெட்டிபோடுவோம்.. சாபம் கொடுக்கும் மருது அழகுராஜ்!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக காளிக்கு காசு வெட்டிபோடுவோம் என்று மருது அழகுராஜ் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: எடப்பாடி பழனிசாமி எங்கு பயணித்தாலும் எதிர்ப்பு தொடரும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். மக்கள் எதிர்ப்பின் வெளிப்பாடு தான் மதுரை விமான நிலையத்தில் வெளிப்பட்டுள்ளதாக கூறிய மருது அழகுராஜ், கொல்லங்குடி காளிக்கு காசு வெட்டிபோடுவோம் என்று சாபம் விட்டுள்ளார்.

சிவகங்கையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்கிறார்.

இதற்கு எதிர்ப்பு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

மருது அழகுராஜ் பேட்டி

மருது அழகுராஜ் பேட்டி

அதேபோல் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் கூறுகையில், இங்கு தங்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக அதிமுகவின் சகோதரர்களும், சகோதரிகளும் வந்துள்ளனர். இன்று மாலை எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ள கூட்டத்தில் பங்கேற்கும் ஆண்களுக்கு ரூ.500, பெண் என்றால் ரூ.300 அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டம் கூட்ட முடியவில்லை

கூட்டம் கூட்ட முடியவில்லை

ஆண்களுக்கு சிறப்பு போன்ஸாக ஒரு குவாட்டர், பிரியாணி அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கையில் கூட்டம் கூட்ட முடியாமல் வெளிமாவட்டங்களில் இருந்து ஆர்.பி.உதயக்குமார், செல்லூர் ராஜூ ஆகியோரை மூலம் ஒரு மொபைல் கூட்டத்தை கூட்டுகிறார். ஒரே நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் கூட்டத்தை கூட்டும் சக்தி ஓபிஎஸ்-க்கு மட்டுமே உண்டு. ஒரே கூட்டத்தை தமிழ்நாடு முழுவதும் கூட்டிக் கொண்டு அலையும் சக்தி எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உண்டு.

விமான நிலையத்தில் எதிர்ப்பு

விமான நிலையத்தில் எதிர்ப்பு

எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து புறப்பட்டு விமானத்தில் வரும்போது மலேசியாவில் இருந்து வந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞர் "அபகரிப்பு பேர்வழி எடப்பாடி ஒழிக, 10.5% இட ஒதுக்கீட்டால் தென்மாவட்ட இளைஞர்கள் எதிர்காலத்தை கெடுத்த எடப்பாடி ஒழிக என கோஷமிட்டுள்ளார்.

எதிர்ப்புகள் தொடரும்

எதிர்ப்புகள் தொடரும்

அவரை மதுரையில் காவல்துறையினரை வைத்து அடித்து அவர் மீது வழக்குப் போட்டு கைது செய்து இருக்கிறார்கள். இதுதான் மக்கள் புரட்சி. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மக்கள் திரள்வார்கள். அந்த பையன் அதிமுகவின் தொண்டன் அல்ல. எடப்பாடி பழனிசாமி முகத்தை பார்த்த உடனேயே இதுபோல் கோபம் வருகிறது. எடப்பாடி பழனிசாமி எங்கு சென்றாலும், இதேபோல் ஆர்ப்பாட்டங்கள் தொடரும். பணத்தை வைத்துக் கொண்டு அதிமுகவை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார்.

காசு வெட்டிபோடுவோம்

காசு வெட்டிபோடுவோம்

நாங்கள் அனைவரும் வயிற்றெரிச்சலோடு சொல்கிறோம். இங்கு வந்த அனைவரும் கொல்லங்குடி காளியம்மன் கோயிலுக்கு சென்று காசு வெட்டி போட்டுவிட்டுத் தான் வீட்டிற்கு செல்வோம். சசிகலா நல்லவரோ, கெட்டவரோ எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் பதவி கொடுத்தார்கள். ஆனால் அவரை நாய் என்று இபிஎஸ் சொன்னார். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தொப்பியை போட்டுக்கொண்டு அண்ணன் தினகரன் என்று சொல்லிவிட்டு, காரியம் முடிந்த உடனே தினகரனுக்கும் இந்த கட்சிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டார்.

எடப்பாடி பழனிசாமி ஒரு நச்சுப்பாம்பு

எடப்பாடி பழனிசாமி ஒரு நச்சுப்பாம்பு

4 ஆண்டுகள் தமிழ்நாட்டில் ஆட்சியை நடத்துவதற்காக ஓபிஎஸ் காலை சுற்றி வந்துவிட்டு, இப்போது ஆட்சி முடிந்த பின் ஓபிஎஸ் ஒழிக என்கிறார். துரோகத்திற்கு இனம் கிடையாது. எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை துரோகத்தில் ஊறி இருக்கும் நச்சுப்பாம்பு. அந்த நச்சுப்பாம்பை பற்றி அண்ணாமலைக்கும் தெரிந்திருக்கும் என்று தெரிவித்தார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்ட நபரை, எச்சரித்து அனுப்ப வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் விடுதலை செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+