சி.எம் ஆசை..அதான் இந்த பேச்சு! ஆ.ராசாவுக்கு எதிராக எச்.ராஜா! சீமான் குறித்து என்ன சொன்னார் தெரியுமா?
சிவகங்கை : இந்துக்கள் மனதை புண்படுத்தி பேசியதாக திமுக முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், சனாதன தர்மத்தில் இந்துக்கள் எல்லோரும் சூத்திரன் என்று எங்கு சொல்லி உள்ளது என பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக எம்பி ஆ.ராசாவின் மனு தர்ம சாஸ்திரத்தில் இந்துக்கள் குறித்து பேசிய பேச்சு தான் தற்போது சமூக வலைதளங்களிலும் சரி, தமிழக அரசியலிலும் சரி மிக முக்கிய பேசு பொருளாக இருக்கிறது.
ஆ.ராசாவின் பேச்சுக்கு தமிழக பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள், கட்சிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் அவரை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்து வருகிறது.

ஆ.ராசா
குறிப்பாக கோவை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் ஆ.ராசாவுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், கடையடைப்பு, உருவ பொம்மை எரிப்பு போன்ற போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ஆ.ராசவுக்கு எதிராக பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் ஆதரவாகப் பேசி வருகின்றனர். குறிப்பாக திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகள் மனு தர்ம சாஸ்திர எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

எச்.ராஜா
நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், சனாதன தர்மத்தில் இந்துக்கள் எல்லோரும் சூத்திரன் என்று எங்கு சொல்லி உள்ளது என பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் எச்.ராஜா பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசுகையில்,"ஆ. ராசா வெறி நாய் கடித்த நபர் போல் பேசி வருகிறார்.

சனாதன தர்மம்
இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார் அவர் பேச்சு அருவருக்கத்தக்கது மட்டுமல்ல. இந்து மத விரோதமானது. இந்து மதம் அதுவாக உருவானது. இந்த நாடு ஒற்றுமையாக இருப்பதற்கு சனாதன தர்மமே காரணம். சனாதன தர்மத்தில் இந்துக்கள் எல்லோரும் சூத்திரன் என்று எங்கு சொல்லி உள்ளது முதல்வர் ஸ்டாலின் திமுகவில் 90% இந்துக்கள் திமுக இருக்கின்றனர் என்கின்றனர்.

நாம் தமிழர் சீமான்
இந்துக்கள் எல்லாம் விபாச்சாரிகள் மகன்கள் என்று ஆ.ராசா பேசுவதை ஸ்டாலின் ஏற்றுக் கொள்கிறாரா ?உடனடியாக ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பாஜகவின் சார்பில் தமிழகம் முழுவதும் புகார் கொடுத்தும் வருகின்றோம். காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் செல்லவும் தயாராகி வருகிறது. சீமான் ஆ.ராஜாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது கொடுத்து கேட்கும் பொழுது எல்லா பைத்தியமும் ஒன்றாக சேர்ந்து உள்ளது. ஆ.ராஜா கிறிஸ்தவ மிஷனரிகள் சொல்வதை கேட்டு பேசுகிறார். அவருக்கு முதல்வர் ஆக வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது." என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications