Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கருகும் நெற்பயிர்கள்.. கண்ணீரில் சிவகங்கை விவசாயிகள்.. உயிர் காக்கும் டேங்கர் லாரி தண்ணீர்

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: பருவமழை பொய்த்ததால் சிவகங்கை மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. கலக்கமடைந்துள்ள விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பணம் கொடுத்து தண்ணீரை விலைக்கு வாங்கி டேங்கர் லாரி மூலம் நெற்பயிர்களுக்கு பாய்ச்சி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனது. சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை போன்ற பகுதிகளை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இந்த ஆண்டும் சில பகுதிகளில் சரியான அளவில் மழை இல்லாமல் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்களுக்கும் தண்ணீர் கிடைக்காமல் கருகத் தொடங்கியுள்ளன.

Severe drought Sivagangai district paddy fields Life saving tanker truck water

தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் ஆற்றுப்பாசனம், கிணற்றுப்பாசனம் மூலம் நெற்பயிர்கள் சாகுபடி செய்து வருகின்றனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் மேட்டூர் அணையை நம்பி பல ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் வைகை ஆற்று நீரை நம்பி பாசனம் செய்யப்படுகிறது.

தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யாத காரணத்தால் நடப்பாண்டு வைகை அணைக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் போனது. அதே நேரத்தில் வடகிழக்கு பருவமழை கை கொடுத்த காரணத்தால் வைகை அணை சில நாட்களுக்கு முன்பு 70 அடியை எட்டியது. இதனையடுத்து 5 மாவட்ட விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஒரு போக பாசனத்திற்காக அணையில் இருந்து பாசனக்கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. வைகை அணையின் பூர்வீக பாசன பகுதிகளான ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்ட தண்ணீர் தேவைக்கு ஆற்றுப்படுகை வழியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதை தொடர்ந்து, வைகை பூர்வீக பாசன பகுதிகள் 1,2,3 பகுதிகளுக்கு வைகை அணையில் இருந்து 3 கட்டங்களாக தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து வைகை பூர்வீக பாசன பகுதியில் 3ல் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 7 நாட்களுக்கு தண்ணீர் வழங்கும் வகையில் கடந்த 23ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 7 நாட்களில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 1504 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 23ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் படிப்படியாக அளவு குறைக்கப்பட்டு நவம்பர் 30ஆம் தேதி நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து வைகை பூர்வீக பாசன பகுதி 2ல் உள்ள சிவகங்கை மாவட்டத்திற்கு டிசம்பர் 1 முதல் 5ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. மீண்டும் இன்று முதல் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் வெள்ளம் போனாலும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் பருவமழையை மட்டுமே நம்பியுள்ளன.

சில மாதங்களுக்கு முன்பு பெய்த பருவமழையை நம்பி நெற்பயிர்களை சாகுபடி செய்த கிராமக்கள் தற்போது வளர்ந்துள்ள பயிர்கள் தண்ணீரின்றி கருகத் தொடங்கியுள்ளதாக கூறியுள்ளனர். தெற்கு மாரந்தை, வடக்கு மாரந்தை, கோலாந்தி, தளிர்தலை, கோரவலசை, கீழச்சேத்தூர், மேலச் சேத்தூர், இலந்தக்கரை, பளுவூர், கோடிக்கரை, கோ.மருதங்குடி, கிராம்புலி, டி.பெருங்கரை, விளங்காட்டூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கரில் மானாவாரியாக நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்த கிராம மக்கள்தான் மழையில்லாமல் தண்ணீரின்றி கருகும் பயிர்களை காப்பாற்ற வழியில்லாமல் தவிக்கின்றனர். ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து சிலர் பாய்ச்சி வருகின்றனர். சிலருக்கு கண்மாய் தண்ணீர் கை கொடுக்கிறது. அதற்கும் வழியில்லாத விவசாயிகள் பணம் கொடுத்து டேங்கர் லாரி மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி பாய்ச்சி வருகின்றனர்.

உணவுக்காகவும், விற்பனை செய்யவும் பயிர் செய்யும் விவசாயிகள், தண்ணீர் இன்றி பயிர்கள் கருகுவதைப் பார்த்து கலக்கமடைந்துள்ளனர். மழை பொய்த்துப்போனதால் உணவுக்காக மட்டுமாவது நெற்பயிர்களை காப்பாற்ற வேண்டுமே என்று காசு செலவு செய்கின்றனர். 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கர் தண்ணீர் 600 முதல் 800 ரூபாய் வரை விற்பனையாகிறது. ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ.12000 முதல் ரூ.16000 வரை தண்ணீருக்காக செலவு செய்கின்றனர். தங்களின் கிராமத்தை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து இழப்பீடு வழங்க வேண்டும் என்பது மாரந்தை கிராம விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பருவமழை அதிக அளவில் பெய்து அறுவடைக்காக காத்திருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி விவசாயிகளை கண்ணீர் விட வைத்தது. சிவகங்கை மாவட்டத்திலோ தண்ணீரின்றி கருகி விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+