கப்பலேறிய சில்மிஷ தாத்தாவின் மானம்.. 70 வயசுல அதுவும் கோயிலுக்குள்.. இப்ப 178 வருஷம் ஜெயிலுதான்
சிவகங்கை: சிவகங்கையின் ஆன்மீக தலத்தில் தஞ்சம் புகுந்த பிஞ்சுயிர்களை சிதைத்த முதியவர் ஒருவருக்கு, மரணம் வரை சிறையிலேயே இருக்கும் வகையில் 178 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது... என்ன நடந்தது? யாரிந்த சில்மிஷ தாத்தா?
சிவகங்கை அருகே உள்ள சோழபுரம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி.. 70 வயதான இவர், அந்தப் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் பூசாரியாக பணியாற்றி வந்தார்.

கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ம் தேதி கோயிலுக்கு வந்த 9 வயது சிறுமி, 10 வயது சிறுவன் மற்றும் 12 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் இந்த தாத்தா பெரியசாமி வழிமறித்துள்ளார்..
சிவகங்கை தாத்தா
தெய்வ சந்நிதி என்றும் பாராமல் அந்த 3 குழந்தைகளுக்கும் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்துள்ளார்.. மேலும் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார்.. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணையைத் தொடங்கினர்..
குழந்தைகள் நலக்குழுவினரும் இதில் தலையிட்டு புகார் அளித்தனர்.. அதனைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் பூசாரி பெரியசாமியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கோகுல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.. விசாரணையின் போது பூசாரி என்ற மதிப்பிற்குரிய இடத்தில் இருந்து கொண்டு குழந்தைகளை மிரட்டி காயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது.
கோயில் பூசாரி
இதனையடுத்து நீதிபதி வழங்கிய தீர்ப்பில் தண்டனைகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
சிறுவர்களை காயப்படுத்தியதற்காக 2 ஆண்டு சிறை மற்றும் 500 ரூபாய் அபராதமும் கொலை மிரட்டல் விடுத்ததற்காக 4 ஆண்டு சிறை மற்றும் 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.. மேலும் குழந்தைகளை மிரட்டியதற்காக 2 ஆண்டு சிறை மற்றும் 500 ரூபாய் அபராதமும் அந்தச் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 60 ஆண்டு சிறை மற்றும் 2000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது..
மற்றொரு பாலியல் குற்றத்திற்காக 20 ஆண்டு சிறை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் முக்கியமாக கோயில் பூசாரி என்ற பொறுப்பான இடத்தில் இருந்து கொண்டு 3 குழந்தைகளுக்கும் இழைத்த கொடுமைக்காக 90 ஆண்டு சிறை மற்றும் 3000 ரூபாய் அபராதம் எனத் தனித்தனியாக தண்டனைகள் அறிவிக்கப்பட்டன.
178 வருடம் ஜெயில் தண்டனை
ஆக, ஒட்டுமொத்தமாகப் பெரியசாமிக்கு 178 ஆண்டுகள் சிறை தண்டனையும் 8000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.. 70 வயதான இந்த முதியவர் தனது வாழ்நாளின் எஞ்சிய காலத்தை முழுமையாகச் சிறையிலேயே கழிக்கும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது..
குற்றவாளிக்குத் தண்டனை வழங்கியதோடு மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அரசு தரப்பில் தலா 5 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 15 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி கோகுல்முருகன் தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் போக்சோ வழக்குகளில் வழங்கப்பட்ட மிகக் கடுமையான தண்டனைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.. இதில் 2 சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமியைப் பலாத்காரம் செய்ததற்காக இந்த 178 ஆண்டு சிறை தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டும்.. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய நீதி கிடைத்துள்ளதாகப் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications