மனுஷங்களாயா நீங்க? முட்டி போட வைத்து.. மாட்டை அடிக்குற மாதிரி! அஜித்குமாரை தாக்கிய அதிர்ச்சி வீடியோ!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்த பெண்ணின் நகை காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரணையில் தாக்கப்பட்ட அஜித்குமார் உயிரிழந்தார். இதை அடுத்து காவலர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் அஜித் குமாரை கோவிலுக்கு பின்னே இருந்த கட்டிடத்தில் வைத்து கொடூரமாக தாக்கிய அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே மனப்புரத்தில் புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு சிவகங்கை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
அந்த வகையில் மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர் அந்த கோவிலுக்கு சென்றிருக்கிறார். மாற்றுத்திறனாளி ஆன அவருக்கு உதவும் வகையில் சக்கர நாற்காலியை அதே கோவிலில் பாதுகாவலராக பணிபுரியும் அஜித் குமார் எடுத்துக் கொடுத்திருக்கிறார்.

தொடர்ந்து தங்களது காரை பார்க்கிங் செய்ய வேண்டுமென அஜித்குமாரிடம் அந்த பெண் சொன்னதாக சொல்லப்படுகிறது. முன்னதாக கூட்ட நெரிசல் காரணமாக தாங்கள் அணிந்திருந்த 10 சவரன் நகையை அந்த பெண்ணும் காரில் வைத்திருக்கின்றனர். இதற்கிடையே கோவிலுக்கு சென்று விட்டு பார்த்தபோது காரின் பின் சீட்டுக்கு அடியில் வைத்திருந்த 10 சவரன் நகையை காணவில்லை என அந்த பெண் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் கூறியிருக்கிறார்.
இதை அடுத்து கோவில் ஊழியர்கள் அஜித்குமாரை திருபுவனம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து இருக்கின்றனர். திருபுவனம் குளம் அருகிலும், கோவில் வளாகத்தில் உள்ள தென்னந்தோப்புக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் வைத்து அஜித்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் அஜித்குமாரின் சகோதரர்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் காவல்துறை விசாரணையில் இருந்தபோது அஜித்குமார் உயிரிழந்தார்.
இதை எடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இறந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். போலீசார் தாக்கியதால் தான் அஜித்குமார் உயிரிழந்ததாக கூறிய உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அஜித்குமாரின் மரணத்திற்கு போலீசார் தான் காரணம் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். வழக்கும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கிடையே அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கடும் சித்திரவதைக்கு ஆளான அடையாளங்கள் இருப்பது தெரிய வந்திருக்கிறது. மண்டை ஓடு, கை, முதுகு, கால்கள் என உடல் முழுவதும் காயங்கள் உட்புற உறுப்புகளில் காயம், ரத்தக்கசிவு ஆகியவை ஏற்பட்டிருக்கிறது. மேலும் கழுத்து பகுதியில் ஏற்பட்ட அழுத்தத்தால் அவர் உயிரிழந்ததாக முதற்கட்ட அறிக்கையை வெளியாகி இருக்கும் நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
அஜித்குமாரை கொடுமையாக தாக்கும் காணொளி !#JusticeForAjithkumar pic.twitter.com/D0sqKFGfZt
— Duraimurugan (@Saattaidurai) July 1, 2025
இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றிருக்கும் நிலையில் போலீசார் எப்படி பொதுமக்களை தாக்கலாம் என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். இந்த நிலையில் அஜித்குமார் தாக்கப்படும் காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கோவிலுக்கு அருகே இருந்த கட்டிடத்தில் அஜித்குமாரை முட்டி போட வைத்து பைப் போன்ற ஒரு பொருளால் காவலர் ஒருவர் மாறி மாறி தாக்குவதும் முட்டி போட்டு அமர்ந்திருக்கும் நிலையில் தான் நகையை எடுக்கவில்லை என அஜித்குமார் கூறும் ஆடியோவும் அந்த வீடியோவில் இருக்கிறது.
இந்த வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் காவல்துறையினர் என்றால் என்னவெல்லாம் செய்யலாமா என கேள்வி எழுப்புகின்றனர் பொதுமக்கள். மேலும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்திருக்கிறது. விசாரணையின் போது தப்பி சென்ற அஜித்குமாருக்கு வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது போலீசார் அஜித்குமாரை தாக்கும் காட்சிகள் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் காவல்துறையின் தாக்குதல் காரணமாகவே அஜித்குமார் உயிரிழந்தது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications