Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவகுமார் பேசிட்டேயிருந்தாரு.. திடீர்னு பழ. கருப்பையாவை பார்த்ததுமே.. சிலிர்த்த சிவகங்கை.. அதே அதே

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: மீண்டும் நடிகர் சிவக்குமாரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. மீண்டும் ரசிகர்களின் அதிருப்திக்கு ஆளாகி வருகிறார் நடிகர் சிவக்குமார்.. என்ன காரணம்?

கடந்த 2018-ல் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிவக்குமார் கலந்துகொண்டார். அப்போது ஒரு இளைஞருக்கு, சிவக்குமாரை நேரில் பார்த்ததுமே, ஆர்வமும் ஆசையும் அதிகமாகிவிட்டது. அதனால், அவருடன் சேர்ந்து செல்பி எடுத்து கொள்ளலாம் என்று நெருங்கி வந்தார்.

Sivaganga District Karaikudi incident and why did Actor Sivakumar do this in Pazha Karuppaiah Function

கோபம்: ஆனால் கோபமடைந்த சிவக்குமார், அந்த இளைஞரின் செல்போனை கீழே தள்ளிவிட்டார். இந்த வீடியோ இணையத்திலும் வேகமாக பரவியதுடன், சிவக்குமார் மீது கடும் கண்டனங்களும் எழுந்தன. இதுகுறித்து சிவக்குமார் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டதுடன் அந்த இளைஞருக்கு புதுசெல்போன் ஒன்றினையும் வாங்கி தந்திருந்தார்,.

இதற்கு பிறகு, அடுத்த வருடமே அதாவது 2019-ல் இதேபோன்ற இன்னொரு சம்பவம் சென்னையில் நடந்தது.. ஒரு கல்யாண வீட்டிற்குள் ரோஸ் கலர் ஷர்ட், வெள்ளை பேன்ட் என வழக்கமான ஸ்மார்ட் லுக்குடன் உள்ளே நுழைந்தார் சிவக்குமார். அவரை கல்யாண வீட்டுக்காரர்கள் வரவேற்று உள்ளே அழைத்து வருகிறார்கள்.

அசால்ட்: அப்போது நீல சட்டை அணிந்த ஒருவர் சிவக்குமார் வருவதை பார்த்ததுமே, செல்பி எடுக்க ஆவலாக வந்தார். சிரித்துகொண்டே உள்ளே நுழைந்த சிவக்குமார், இந்த நபரை எப்போது பார்த்தார் என்றே தெரியவில்லை, அசால்ட்டாக கையால் இளைஞரின் செல்போனை தட்டிவிட்டார். இதுவும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

இதோடு இந்த விவகாரம் அடங்கவில்லை.. கடந்த ஏப்ரல் மாதம்கூட ஒரு சலசலப்பு கிளம்பியது... தமிழக காங்கிரஸ் மூத்த தலைவரான கே.எஸ்.அழகிரி மகள் திருமண வரவேற்பு விழா சென்னை திருவான்மியூரில் நடந்தது. மேடையில் மணமக்களை முக்கிய பிரமுகர்கள் வாழ்த்தி கொண்டிருந்தார்கள்.. அவர்கள் அனைவரையும் அழகிரி சால்வை அணிவித்து வரவேற்று கொண்டிருந்தார்.

சிவக்குமார்: அப்போது நடிகர் சிவக்குமாரும் மேடையேறினார். அவரை பார்த்ததுமே, வரவேற்பதற்காக தன்னுடைய கையில் வைத்திருந்த சால்வையை பிரித்துக்கொண்டிருந்தார் அழகிரி..

இதை பார்த்த சிவக்குமார், முதல்ல அதை இங்கே கொடுங்க என உரிமையோடு கேட்டதோடு, அழகிரியிடமிருந்து, சால்வையை விருட்டென பிடுங்கி, அதை மறுபடியும் அழகிரிக்கே போர்த்தி மகிழ்ந்து வாழ்த்தும் சொன்னார். சிவக்குமார் சால்வயை பிடுங்கியதுமே, கல்யாண மண்டபத்தில் இருந்தவர்கள் ஒருகணம் பதறிப்போய்விட்டார்கள்.

ஆனால், நட்பையும் இதே பாணியில்தான் சிவக்குமார் காட்டுவார் போலும் என்று சோஷியல் மீடியாவில் ஆதரவு கமெண்ட்கள் விழுந்தன. இப்போது மீண்டும் ஒரு சலசலப்பில் சிக்கியிருக்கிறார் சிவக்குமார்.

காரைக்குடி: காரைக்குடியில் புத்தக வெளியீட்டு விழா நடந்துள்ளது.. காரைக்குடி பஸ் ஸ்டாண்டு அருகே உள்ள கண்ணதாசன் மணி மண்டபத்தில் மூத்த தலைவர் பழ.கருப்பையாவின் பழ.கருப்பையா எழுதிய "இப்படித்தான் உருவானேன்" என்கிற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் மற்றும் பழ. நெடுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேடையில் பிரமுகர்கள் ஒவ்வொருவராக பேசிக் கொண்டேவந்தனர்.. ஒரு ஓரத்தில் மூத்த தலைவர் பழ.கருப்பையா உட்கார்ந்து கொண்டிருந்தார்.. பிறகு, நடிகர் சிவகுமார் எழுந்து தன்னுடைய பேச்சை துவங்கினார்.. மைக்கில் பேசிக்கொண்டேயிருந்த சிவக்குமார், திடீரென பேச்சை பாதியிலேயே நிறுத்திவிட்டு, பழ.கருப்பையா காலில் விழுந்து வணங்கினார்.. பிறகு மறுபடியும் மைக்கில் பேச்சை ஆரம்பித்தார்.

Sivaganga District Karaikudi incident and why did Actor Sivakumar do this in Pazha Karuppaiah Function

இந்த சம்பவம் மிகுந்த சலசலப்பை கூட்டி வருகிறது. காரணம், அரசியல் அனுபவங்கள் பலவிருந்தாலும் பழ.கருப்பையாவின் வயது 80.. ஆனால், சிவகுமாரின் வயதோ 82 ஆகிறது. வயதில் சிறியவரான பழ.கருப்பையாவின் காலில் சிவகுமார் விழுந்ததை பார்த்துமே, அங்கிருந்தவர்கள் ஆச்சரியப்பட்டு போனார்கள்.

இறுதியில் நிகழ்ச்சியின் முடிவில், நடிகர் சிவகுமார் நிகழ்ச்சியை முடித்து கொண்டு கிளம்ப முயன்றார்.. அப்போது கூட்டத்தில், சிவகுமாருக்கு வயதான முதியவர் ஒருவர், ஆசை ஆசையாய் சால்வை கொண்டு வந்து கொடுத்தார்... அதை பிடுங்கி வெறுப்புடன் தூக்கி வீசி எறிந்துவிட்டு சென்றுவிட்டார் சிவகுமார்... இதை பார்த்ததுமே, அந்த முதியவர் மனம் நொந்து போயிருக்கிறார். இதுதொடர்பான வீடியோவும் இப்போது வெளியாகிவிட்டது.

மீண்டும் கண்டனம்: மறுபடியும் சிவகுமார் பொது நிகழ்வுகளில் இப்படி நடந்து கொள்வது ரசிகர்கள் இடையே கோபத்தை வரவழைத்துள்ளதுடன், அவருக்கு எதிராக கண்டனங்களையும் கிளப்பிவிட்டு வருகிறது.

ஏற்கனவே செல்போன் விவகாரத்தில் சிவக்குமார் விளக்கம் அளிக்கும்போது "சம்பந்தப்பட்டவரின் அனுமதியின்றி செல்பி எடுப்பது நியாயமா? நானும் மனிதன்தானே?" என்று கேட்டிருந்தார் சிவகுமார்..

வாஸ்தவம்தான்:
தனிமனித உரிமைப்படி சிவகுமார் கேட்டது நியாயமே கேள்வியே என்றாலும், ஆர்வமிக்க அபிமானிகளின், ஆழமான பாசத்தையும் உணர்வது அவசியமாகிறது. யோகா, தியானம் என மனதை கட்டுக்குள்ளேயே வைத்திருந்தாலும்கூட, ஒருசில இயல்புகள் அவைகளையெல்லாம் மீறி வெளிவந்துவிடும் போல..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+