Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவகங்கை அருகே சிலிர்ப்பு.. செல்ல மகன் சொன்னதை அப்படியே "காதுல" போட்டுக்கிட்ட அப்பா.. செம காதணி விழா

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கையில் சேகரின் 10 வயது மகனுக்கு காது குத்து விழா நடந்துள்ளது.. மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட இந்த காதணி விழாவில், ஏராளமான உறவினர்களும், நண்பர்களும் திரண்டு வந்து சிறப்பித்தனர். இந்த விழாவின் போட்டோக்கள் இணையத்தில் ஏன் வைரலாகி கொண்டிருக்கிறது தெரியுமா?

காதணி விழா என்பது இந்து தமிழர்களிடையே காணப்படும் ஒரு கட்டாய சடங்காகும்... ஆனால், இதில் ஏராளமான மருத்துவ உண்மைகள் அடங்கியிருக்கின்றன..

Sivaganga ears pierced Gold Jewellery

குறிப்பாக, பார்வை திறனை மேம்படுத்தக்கூடிய 2 முக்கிய புள்ளிகள், இந்த காது குத்தும் பகுதியில்தான் உள்ளன. காது பகுதியில் துளையிட்டு காதணி போடும்போது, அதிலிருக்கும் செவித்திறன் நரம்புகள் தூண்டப்பட்டு, குழந்தைகளின் உட்புற திறந்து, காது கேட்கும் திறன் மேம்படும்...

காது குத்தலின் ஆரோக்கியம்

காதுகளில் இருக்கும் அக்குபிரஷர் புள்ளிகள், நுரையீரல் மற்றும் சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்தி, ஆஸ்துமா, மூச்சு பிரச்சனைகள், செரிமான பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை தடுக்கிறது. காது குத்தும் இடத்தில் இருக்கும் மர்மப் புள்ளி, ஆண் மற்றும் பெண் இருவரின் இனப்பெருக்க ஆரோக்கியத்துக்கும் மிகவும் முக்கியமானதாகும்.. பெண் குழந்தைகளுக்கு காது குத்துவதால், அவர்கள் வயதிற்கு வந்தபின், மாதவிடாய் சுழற்சி சீராக இருக்கும் என்கிறார்கள்..

இவ்வளவு நன்மைகளை தரக்கூடியதால்தான், காதணி விழாவை நம்முடைய முன்னோர்கள் கட்டாய சடங்காக கொண்டுவந்துள்ளனர்.. இந்த விழாவில், குழந்தைகளுக்கு காதில் துளையிட்டு தங்கக் காதணி அணிவிக்கப்படுகிறது... இச்சடங்கின் முறைகள் சாதி சமயத்திற்கு தக்கவாறு மாறுபடுகிறது.

தடபுடலாக நடந்த காதணி விழா

தென்மாவட்டங்களில் இந்த காது குத்து விழா என்றாலே கோலாகலமாக கொண்டாடப்படும்.. குலதெய்வ கோயிலுக்கு அழைத்து சென்று மொட்டை போட்டு, குளிப்பாட்டி, தாய்மாமன் கொண்டு வரும் புத்தாடைகளை அணிவித்து மகிழ்வார்கள்..

குழந்தையை தாய் மாமன் மடியில் அமரவைத்து காது குத்துவார்கள்.. உடனே தங்கக் காதணிகளை குழந்தைக்கு போடுவார். அத்துடன் ஏராளமான சீர்வரிசையையும், தங்களது குட்டி மருமகளுக்கு செய்வார்கள். ஒருவேளை தாய்மாமன் இல்லாவிட்டால், அதற்கு நிகரான உறவை வைத்து இந்த காது குத்தல் விழாவை கொண்டாடுவார்கள்.

வியந்து நின்ற உறவினர்கள்

ஆனால், சிவகங்கையில் நடந்துள்ள ஒரு காதணி விழா, பலருக்கும் வியப்பை தந்துள்ளது.. சிவகங்கை மதுரை முக்கு பகுதியை சேர்ந்தவர்கள் சேகர் - செல்வராணி தம்பதியினர்.. இவர்களது மகன் விஸ்வநாதனுக்கு 10 வயதாகிறது. சேகர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். செல்வராணி சிவகங்கை மருத்துவமனையில் நர்ஸ் ஆக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், மகன் விஸ்வநாதனுக்கு காதணி விழா நடத்த பெற்றோர் முடிவு செய்தனர்.. இதற்காகவே சேகர், வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். நேற்று முன்தினம் சிவகங்கை தனியார் மண்டபத்தில் காதணி விழா தடபுடலாக நடைபெற்றது. இதில், சேகர் - செல்வராணியின் குடும்பத்தினரும், நண்பர்களும், உறவினர்களும் பங்கேற்றிருந்தனர்.

அடம் பிடித்த விஸ்வநாதன்

விழா நடந்து கொண்டிருந்தபோது, "அப்பாவுக்கும் என்னைப் போலவே காது குத்த வேண்டும்" என்று விஸ்வநாதன் அடம்பிடிக்க ஆரம்பித்துவிடவும், இதைக்கேட்டு அங்கிருந்தவர்கள் திகைத்தனர்.. விஸ்வநாதனை எவ்வளவோ சமாதானம் செய்தும் முடியவில்லை..

இறுதியில், மகனின் பாச வேண்டுகோளை நிறைவேற்ற முடிவு செய்தார் சேகர்.. இதற்காக அதே மேடையில் மகனுக்காக காது குத்திக் கொண்டார்.. அத்துடன் தங்கத்தோடும் அணிந்து கொண்டார்... ஏற்கனவே சேகருக்கு சிறுவயதிலேயே காது குத்திவிட்டார்களாம். ஆனாலும் மகனின் ஆசைக்காக 2வது முறையாக காது குத்திக் கொண்ட சம்பவம் சிவகங்கையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பான போட்டோக்களும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+