அம்பலப்பட்ட நிகிதா.. சிவகங்கை அஜித்குமார் மீது பொய் புகார்? சிபிஐயிடம் சிக்கிய ஆதாரம்! பரபர ட்விஸ்ட்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அஜித் குமார் காவல் நிலைய மரண வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் புகார் அளித்த நிகிதா முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்தது தெரிய வந்துள்ளது. மேலும் நிகிதாவின் கார் பார்க்கிங்கை விட்டு வெளியே செல்லவில்லை என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே மடப்புரத்தில் புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவிலில் பாதுகாவலராக அஜித் குமார் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா என்பவர் தனது தாயுடன் சென்றார்.
தொடர்ந்து தங்களது காரை பார்க்கிங் செய்ய வேண்டுமென அஜித்குமாரிடம் அந்த பெண் சொன்னதாக சொல்லப்படுகிறது. முன்னதாக கூட்ட நெரிசல் காரணமாக தாங்கள் அணிந்திருந்த 10 சவரன் நகையை அந்த பெண்ணும் காரில் வைத்திருந்தாகச் சொல்லப்படுகிறது.

சிவகங்கை அஜித் குமார்
இதற்கிடையே கோவிலுக்கு சென்று விட்டு பார்த்தபோது காரின் பின் சீட்டுக்கு அடியில் வைத்திருந்த 10 சவரன் நகையை காணவில்லை என அந்த பெண் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் கூறியிருக்கிறார். இதை அடுத்து கோவில் ஊழியர்கள் அஜித்குமாரை திருபுவனம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து இருக்கின்றனர். திருபுவனம் குளம் அருகிலும், கோவில் வளாகத்தில் உள்ள தென்னந்தோப்புக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் வைத்து அஜித்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
காவல் மரணம்
மேலும் அஜித்குமாரின் சகோதரரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் காவல்துறை விசாரணையில் இருந்தபோது அஜித்குமார் உயிரிழந்தார். இதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இறந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். போலீசார் தாக்கியதால் தான் அஜித்குமார் உயிரிழந்ததாக கூறிய உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டர். இந்த நிலையில் அஜித்குமார் மரணம் தமிழக அளவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிபிஐ விசாரணை
இதனைத் தொடர்ந்து சிபிஐ டிஎஸ்பி மோஹித் குமார் தலைமையிலான அதிகாரிகள் மதுரையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அஜித்குமார் தாக்கப்பட்டதாக சொல்லப்பட்ட இடத்தில் விசாரணை நடத்தியதோடு அஜித்குமாரின் சக ஊழியர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 20 நாட்களுக்கும் மேலாக விசாரணை நீடித்து வரும் நிலையில், தற்போது புகார் அளித்த நிகிதா முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்தது தெரிய வந்துள்ளது. மேலும் நிகிதாவின் கார் பார்க்கிங்கை விட்டு வெளியே செல்லவில்லை என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.
சிசிடிவி
கடந்த 27ஆம் தேதி காலை ஒன்பதரை மணிக்கு கோவிலுக்கு நிகிதா வந்திருக்கிறார். காரை அங்கிருந்து பார்க் செய்து தருமாறு அஜித்குமாரிடம் சாவியை கொடுத்திருக்கிறார். தொடர்ந்து அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் அருணிடம் அஜித்குமார் சாவியை கொடுத்த நிலையில் பார்க்கிங்கில் கார் நிறுத்தப்பட்டு இரண்டாவது நிமிடத்திலேயே சாவி நிகிதாவிடம் வந்திருக்கிறது. ஆனால் நிகிதா அளித்த புகாரில் கார் சாவி நீண்ட நேரம் கழித்து தான் தன்னிடம் தரப்பட்டது எனக் கூறியிருந்தார்.
பொய் புகார் கொடுத்த நிகிதா
அஜித் குமாரும் அவரது நண்பரான அருளும் வடகரை காரை ஓட்டிச் சென்றதாக கூறப்பட்டது. ஆனால் சிபிஐ அதிகாரிகள் முதல் நாள் விசாரணையை வடகரையில் இருந்தே தொடங்கி நிலையில் சிசிடிவி கட்சிகளை ஆராய்ந்த போது அந்த பக்கம் நிகிதாவே காரை ஓட்டி வந்து, மீண்டும் அவரே அவ்வழியாக சென்றது பதிவாகி இருந்தது. இரண்டு நிமிடத்தில் நிக்கிதாவிடம் கார் சாவி ஒப்படைக்கப்பட்ட நிலையில் தரிசனம் முடிந்ததும் எட்டு நிமிடத்தில் அவருக்கு மீண்டும் கார் சாவி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே கோவிலில் இருந்தே நிகிதாவின் கார் எங்குமே செல்லாத நிலையில், நிகிதா அளித்தது பொய் புகாராக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications