20 அடி உயர பிரமாண்ட அரிவாளுடன் வந்த கார்த்தி சிதம்பரம்.. மாரநாடு கருப்பணசாமிக்கு நேர்த்திக்கடன்!
சிவகங்கை: சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம், மாராடு கருப்பண்ண சுவாமி கோவிலுக்கு 20.5 அடி உயரம் கொண்ட பிரமாண்ட அரிவாளை வழங்கி தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றி உள்ளார். லோக்சபா தேர்தலில் 2.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதால் 20.5 அடி உயரத்தில் அரிவாள் செய்து நிறுவியுள்ளார் கார்த்தி சிதம்பரம்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை லோக்சபா தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவை விட சுமார் 2 லட்சத்தி 56 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று அமோக வெற்றி பெற்றார்.

தேர்தலுக்கு முன்னதாக, தொகுதி முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த கார்த்தி சிதம்பரம், மானாமதுரையை அடுத்த திருப்பாச்சேத்தி அருகே மாரநாட்டில் பிரசித்தி பெற்ற கருப்பண சுவாமி கோயிலுக்கும் சென்றார். அப்போது, தேர்தலில் வெற்றி பெற்றதும் கருப்பண்ணசாமிக்கு நேர்த்திக் கடனாக அரிவாள் அடித்து வைப்பதாக கார்த்தி சிதம்பரம் வேண்டுதல் வைத்திருந்தார்.
சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு. @KartiPC அவர்கள், சிவகங்கை மக்களவைத் தேர்தலில் 205664 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கு வேண்டுதலாக மாரநாடு கருப்பர் கோயிலுக்கு 20.5 அடி அருவாளை வழங்கிய போது. pic.twitter.com/xYUOX1PdH5
— Karti PC Office (@KartiPCoffice) August 16, 2024
இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் பெருவெற்றி பெற்ற நிலையில் மானாமதுரையை அடுத்த திருப்பாச்சேத்தி அருகே மாரநாடு கருப்பசாமிக்கு நேர்த்திக்கடனைச் செலுத்தினார் கார்த்தி சிதம்பரம். நேரில் சென்று தனது கையாலேயே கருப்பணசாமி கோவிலுக்கு அரிவாளை வழங்கி உள்ளார்.

2 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் 20.5 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட அரிவாளைத் தயார் செய்து இன்று நேரடியாகவே கோவிலுக்குச் சென்று தனது கையாலேயே நிறுவி தனது நேர்த்திக்கடனைச் செலுத்தி உள்ளார் கார்த்தி சிதம்பரம் எம்.பி.












Click it and Unblock the Notifications