ஏன் இப்படி செய்தார் புவனேஸ்வரி டீச்சர்.. இன்னும் புரியாத புதிரில் காரைக்குடி.. தீவிரமடையும் விசாரணை
காட்டுக்குள் பள்ளி ஆசிரியை தற்கொலை குறித்த விசாரணை தீவிரமாகி வருகிறது
சிவகங்கை: காட்டுக்குள் புவனேஸ்வரி டீச்சர் தூக்கில் தொங்கி கொண்டிருந்தது குறித்து விசாரணை இன்னமும் நடந்து வருகிறது.. முதலில் கையை அறுத்து கொண்டுள்ளார்.. அதற்கு பிறகுதான் தூக்கில் தொங்கினாராம்.. சிவகங்கையில் இந்த சம்பவம் இன்னமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியபடியே உள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் காண்டீபன்.. இவர் தீயணைப்பு துறையில் வேலை பார்த்து வருகிறார்.. இவரது மனைவி புவனேஸ்வரி.

அரசு பள்ளியில் டீச்சராக வேலை பார்த்து வந்தார்.. இதை தவிர, பரதநாட்டியம் என்றால் இவருக்கு சிறு வயதில் இருந்தே அளவு கடந்த விருப்பம் என்பதால், தனியாக ஒரு டான்ஸ் பள்ளியையும் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்தார்.. அதில், ''இனி நான் யாருக்கும் பாரமாக இருக்க போவதில்லை'' என்று தெரிவித்திருந்தார்.. டீச்சரின் இந்த ஸ்டேட்டஸை நடன பள்ளி மாணவி ஒருவர் பார்த்துள்ளார்.. இதையடுத்து, உடனடியாக புவனேஸ்வரியின் கணவருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ந்து போன காண்டீபன் புவனேஸ்வரியின் செல்போனுக்கு உடனே தொடர்பு கொண்டார்.. ரிங் போனது, ஆனால் யாரும் எடுக்கவில்லை. இதனால் பதட்டமடைந்த காண்டீபன், உடனடியாக போலீசுக்கு புகார் சொல்லவும், போலீசார் டீச்சரின் செல்போன் நம்பரை டிராக் செய்தனர்.
காரைக்குகுடி - திருச்சி நெடுஞ்சாலையில் சிக்னல் காட்டியது.. அதனால் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் இறங்கும்போதுதான், காட்டுப்பகுதி ஒன்றில் ஸ்கூட்டி நின்றிருந்ததை கண்டனர்.. பிறகு ஒரு மரத்தில் புவனேஸ்வரி பிணமாக தூக்கு போட்டு கொண்டதையும் கண்டறிந்தனர்.. இதையடுத்து, சடலத்தை மீட்டு விசாரணையும் ஆரம்பமானது.
புவனேஸ்வரி தற்கொலைக்கு பலவாறாக முயன்றது தற்போது தெரியவந்துள்ளது.. முதலில் சுகர் மாத்திரைகளை நிறைய சாப்பிட்டுள்ளார்.. ஆனால், அதில் அவர் சாகவில்லை.. அதனால், கை நரம்பை அறுத்து கொண்டுள்ளார்.. கைகள் வெட்டுப்பட்டு ரத்தம் கொட்டியதே தவிர, அதிலும் அவர் சாகவில்லை.. இதற்கு பிறகுதான், கடைசியாக தூக்கில் தொங்கி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
பிறகு அவரது டைரி ஒன்று சிக்கியது.. அதில், வாட்ஸ்அப்பில் என்ன ஸ்டேட்டஸ் வைத்தாரோ, அதையேதான் அதிலும் எழுதி வைத்திருந்தார்.
இப்போது வரை டீச்சர் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? தம்பதி 2 பேருமே நல்ல வேலையில், அரசு வேலையில் கைநிறைய சம்பளம் வாங்கி வரும்போது, அவர்களுக்குள் ஏதாவது தகராறா? என்பது குறித்து விசாரணையும் நடந்து வருகிறது.
-
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications