Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவகங்கை மண்ணில் சீமான் அதிரடி: காரைக்குடியில் யாருக்கு களம் சாதகம்? திமுக, பாஜகவின் கணக்கு தப்புமா?

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: விரைவில் தேர்தல் வரப்போகிறது.. சீட் பங்கீடு, தொகுதி, நிலவரம் , உள்ளிட்ட விவகாரங்கள் உச்சக்கட்டத்தில் உள்ளன.. இதனால் கூட்டணி கட்சிகளுக்குள் ஒருவித பரபரப்பும் சலசலப்பும் தென்பட்டு வருகிறது.. ஆனால், இந்த பரபரப்பும், சலசலப்பும் இல்லால் கூலாக ஒருவர் உண்டென்றால் அது சீமான் தான்.. சிங்கம் எப்போதும் சிங்கிளாகத்தான் வரும் என்று சொல்லி, ஒவ்வொரு முறையும் தனித்து களம் காண்பவர்.. இப்போதும் தனித்து போட்டியிடுகிறது நாதக.. அப்படியானால் சீமான் எங்கே போட்டியிட போகிறார்???

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி தொகுதி பக்கம்தான் தன்னுடைய கவனத்தை திருப்பி உள்ளதாக தெரிகிறது..

Sivagangai Seeman DMK Karaikudi Annamalai

இந்த முறை எப்படியும் சட்டமன்றத்திற்குள் நுழைந்துவிட வேண்டும் என்ற முனைப்பில், தனது சொந்த மாவட்டமான சிவகங்கையில் உள்ள காரைக்குடி தொகுதியைத் தேர்ந்தெடுத்துள்ளதாக கூறுகிறார்கள்.

காரைக்குடி தொகுதி

கடந்த நவம்பர் மாதம் காரைக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தின் பிற தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த சீமான், காரைக்குடியை மட்டும் "சஸ்பென்ஸ்" ஆக வைத்திருந்தது இந்த யூகங்களுக்கு வலு சேர்த்துள்ளது.

சீமான் கடந்த காலங்களில் கடலூர் மற்றும் திருவொற்றியூர் தொகுதிகளில் போட்டியிட்டார். ஆனால், இம்முறை "சொந்த மண்ணில் போட்டியிடுவேன்" என்று அவர் கொடுத்த சூசகமான அறிவிப்பும், காரைக்குடியை நோக்கியே கைகாட்டுகிறது.

சிவகங்கை சிறுத்தை

அவரது சொந்த ஊரான அரணையூர் அமைந்துள்ள மானாமதுரை தனித்தொகுதி என்பதால், அவருக்கு காரைக்குடி ஒரு பாதுகாப்பான மற்றும் செல்வாக்குமிக்க தேர்வாக அமைந்துள்ளது. வரும் பிப்ரவரி 21-ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், காரைக்குடி வேட்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னொரு பக்கம், பாஜகவும் காரைக்குடி மீது அதீத ஆர்வம் காட்டி வருகிறது. 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்துள்ள பாஜக தலைமை, காரைக்குடி உள்ளிட்ட 6 முக்கிய தொகுதிகளுக்குத் தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலையை சுற்றுப்பயண பொறுப்பாளராக நியமித்துள்ளது.

பாஜக அண்ணாமலை

அதாவது காரைக்குடியில் பாஜக நேரடியாகக் களம் காணும் பட்சத்தில், அண்ணாமலையே அங்கு வேட்பாளராகவும் களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிகின்றன. இதனால், காரைக்குடியில் சீமான் மற்றும் அண்ணாமலை என 2 பெரும் ஆளுமைகள் மோதும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த தொகுதியில் திமுக மற்றும் அதிமுக ஆகிய திராவிட கட்சிகள் நேரடியாக போட்டியிடாமல், முறையே காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய தேசியக் கட்சிகளுக்கு ஒதுக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இது சீமானுக்கு ஒரு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.

திமுக ஹேப்பி

காரணம், திராவிட கட்சிகளின் அதிருப்தி ஓட்டுகள் மற்றும் தமிழ் தேசிய உணர்வாளர்களின் ஆதரவு தனக்கு வெற்றியை தேடித்தரும் என அவர் நம்புகிறார். அதேசமயம், தமிழக வெற்றிக் கழகத்தின் வரவும், அண்ணாமலையின் தீவிர பிரச்சாரமும் வாக்குகளை பிரித்து போட்டியை இன்னும் கடுமையாக்கலாம்..

ஆனால், அண்ணாமலை காரைக்குடியில் போட்டியிடுவது சீமானுக்கு பாதகமாகவே அமைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.. குறிப்பாக அண்ணாமலையும் சரி, சீமானும் சரி, இவர்கள் இருவருமே இளைஞர்களின் வாக்குகளை பிரதானமாக நம்பி களம் இறங்குபவர்கள்..

அந்தவகையில், இளைஞர்களின் வாக்குகள் இருவருக்கும் இடையே பிரியும் என்பதால், சீமான் பெற வேண்டிய வெற்றிக்கான வாக்கு விகிதம் குறையக்கூடும்... கடைசியில், இந்த வாக்கு சிதறல், ஆளும் திமுக கூட்டணி வேட்பாளருக்கே எளிதான வெற்றியைத் தேடித்தந்துவிடும் என்பதையும் இங்கு நாம் அழுத்தமாக குறிப்பிட வேண்டி உள்ளது.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+