தங்கத்தை கண்டதுமே சபலம்.. 5 சவரன் நகை அடகு வைத்து.. சிவகங்கை மகேஸ்வரி சம்பவத்தில் அதிர்ச்சி சம்பவம்
சிவகங்கை: சிவகங்கை காட்டுப்பகுதியில் பெண்ணை கொலை செய்த விவகாரமானது, பெரும் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது. காரைக்கால் போலீசார் குற்றவாளியை வெறும் 5 மணி நேரத்தில் கைது செய்திருந்த நிலையில், இந்த கொலையில் மேலும் சிலருக்கு தொடர்புள்ளதால் அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று பெண்ணின் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது காரைக்காலில் பரபரப்பை தந்துவிட்டது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வசித்து வரும் தம்பதி பாண்டிக்குமார் - மகேஸ்வரி.. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் வெளிநாட்டில் டாக்டருக்கும், இளைய மகள் 8ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். பாண்டிக்குமார் சிங்கப்பூரில் வேலைபார்த்து வருகிறார்.

மகேஸ்வரிக்கு சொந்தமாக நிலம், வீட்டு மனை வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால், நிறைய பகுதிகளுக்கு நேரடியாகவே சென்று, நிலங்களை பார்த்து வந்தார்.. சம்பந்தப்பட்டவர்களும் மகேஸ்வரியுடன் காரில் சென்று, வீட்டுமனைகளை காட்டுவார்கள்.
அந்தவகையில் நேற்று முன்தினமும் சிலரை அழைத்து கொண்டு காரைக்குடி அருகே ஆவுடைப்பொய்கை பகுதியில் நிலம் பார்க்க சென்றிருக்கிறார். ஆனால், தன்னை அழைத்து அவர்களுக்கும் மகேஸ்வரிக்கும் இடையே தகராறு வெடித்துள்ளது..
20 சவரன் நகைகள்
ஆத்திரமடைந்த நபர்கள், மகேஸ்வரி அவரது தலையை கார் கதவில் வைத்து நசுக்க, கழுத்தையும் நெரித்து, முகத்தையும் சிதைத்து கொன்று, அங்கிருந்து தப்பிவிட்டார்கள். மேலும், மகேஸ்வரி அணிந்திருந்த 20 சவரன் நகையையும் பறித்துக்கொண்டு ஓடிவிட்டார்கள்.
காட்டுப்பகுதியில் காரில் பெண்ணின் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கவும், விரைந்து சென்ற அவர்கள் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்து விசாரணையும் மேற்கொண்டனர். 20 சவரன் நகை மாயமானதால் நகைக்காக கொல்லப்பட்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்தது. அங்கிருந்த சிசிடிவியின் அடிப்படையிலும் விசாரணை ஆரம்பமானது.
வீட்டு மனை, நிலங்கள்
அப்போதுதான், மகேஸ்வரிக்கு டிரைவிங் கற்றுக் கொடுத்த காரைக்குடி லட்சுமி நகரை சேர்ந்த சசிகுமார் (33) என்பவர், மகேஸ்வரியை நிலம் பார்க்க காரில் அழைத்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், கொலை நடந்த அடுத்த 5 மணி நேரத்தில் சசிக்குமாரை கைது செய்தனர்.
அப்போதுதான் சம்பவத்தன்று மகேஸ்வரியை காரில் அழைத்து சென்றதும், காரை ஓட்டி வந்ததும் சசிகுமார் என்பதும் உறுதியானது. இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வாக்குமூலமாக கூறியிருக்கிறார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் சொல்லப்படுவதாவது: மகேஸ்வரிக்கு நிலம் வாங்கி விற்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்.. மேலும் தனக்கு தெரிந்தவர்களுக்கு பணம் கொடுக்கல் வாங்கலிலும் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
இழுத்தடித்த மகேஸ்வரி
அந்தவகையில் மகேஸ்வரிக்கு பணத்தேவை இருந்ததால், அதுபற்றி தன்னுடைய டிரைவர் சசிக்குமாரிடம் சொல்லி உள்ளார்.. அதற்கு சசிகுமாரும், தனக்கு தெரிந்த நபரிடம் பெரும் தொகையை வாங்கி மகேஸ்வரியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பணத்தை திரும்ப கொடுக்காமல் மகேஸ்வரி இழுத்தடித்து வந்துள்ளார்.
இதனிடையே பணம் கொடுத்தவர், அதை திரும்ப கேட்டு சசிக்குமாருக்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளார்.. உடனே சசிகுமார், மகேஸ்வரியிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டு வந்துள்ளார்...
இந்தநிலையில்தான் காரைக்குடி அருகே ஆவுடைபொய்கை காட்டுப்பகுதியில் உள்ள ஒரு நிலத்தை வாங்கி விற்பது தொடர்பாக, அந்த இடத்தை பார்ப்பதற்காக காரில் சசிக்குமாரும், மகேஸ்வரியும் சென்றிருக்கிறார்கள்.. அங்கே சென்றபோதும் சசிக்குமார், மகேஸ்வரியிடம் தன்னுடைய பணத்தை கேட்டுள்ளார்.
அடகு வைக்கப்பட்ட நகை
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில், ஆத்திரம் அடைந்த சசிக்குமார், கல்லால் மகேஸ்வரியின் முகத்தில் அடித்து, முகத்தை சிதைத்து கொலை செய்துள்ளார். பிறகு மகேஸ்வரியிடமிருந்து 20 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்" என்று தெரியவந்துள்ளது.
இதையடுத்து, 20 சவரன் நகைகளில் 15 சவரன் தங்க நகைகளை சசிகுமாரிடமிருந்து மீட்டுள்ளனர்.. மிச்சமுள்ள நகையை ஒரு கடையில் அடகு வைத்திருக்கிறாராம் சசிகுமார்.
உயிருக்கு ஆபத்து
இந்த கொலையில், வீட்டு டிரைவரான தன் மீது யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, மகேஸ்வரியின் செல்போனில் இருந்து, கணவர் பாண்டிக்கு, புரோக்கர் ஒருவரால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக சசிகுமாரே மெசேஜ் அனுப்பி உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனினும், இந்த கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளதாக கூறி அவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி மகேஸ்வரியின் உறவினர்கள் நேற்று மதியம் காரைக்குடி பகுதியில், திருச்சி-ராமேசுவரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.. எனவே மகேஸ்வரியின் கொலை விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளதால், அது தொடர்பான விசாரணையும் விரிவடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications