தேவர் குருபூஜை: சிவகங்கையில் டாஸ்மாக் செயல்படாது.. ஆட்சியர் அறிவிப்பு.. மது பிரியர்களுக்கு அதிர்ச்சி
சிவகங்கை: மருதுபாண்டியர், தேவர் குருபூஜையை ஒட்டி சிவகங்கையில் குறிப்பிட்ட நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் பொற்கொடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் செயல்படாது என அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குரு பூஜை நடக்கிறது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்துவார்கள்.

இதனையொட்டி, பொது அமைதி மற்றும் சட்ட ஒழுங்கினை பாதுகாக்கும் வகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் அக்டோபர் 28, 29, 30 ஆகிய 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும். இந்த 3 நாட்களில் டாஸ்மாக்குகளில் மதுவிற்பனை நடைபெறாது என அம்மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்து இருக்கிறார்.
இதற்கிடையே சிவகங்கை மாவட்டத்தில் மதுபானங்கள் விற்பனை நடக்காது, டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி அறிவித்துள்ளார். மருதுபாண்டியர், தேவர் குருபூஜையை ஒட்டி 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை சிவகங்கையில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை தினங்களில் தேவையில்லா மோதல், வன்முறைகள், சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. மக்கள் அமைதியாக நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும். டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால், கள்ளச்சந்தையில் மதுபானங்களை விற்கலாம் என நினைக்க கூடாது.
கள்ள சந்தைகள் வழியாக விற்கும் நபர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு, கண்காணிப்பு பணிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது" என்று கூறினார்.
கள்ளச் சந்தையில் மது பானங்கள் விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்து உள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications