டிக்டாக் வினிதா.. அபி.. சரண்யா.. 3 பேருமே எஸ்கேப்.. சுவர் ஏறி குதித்து தப்பி ஓடி விட்டாராம் வினிதா!
டிக் டாக் இளம்பெண் வினிதா காப்பகத்தில் இருந்து மாயமாகி உள்ளார்
Recommended Video
தேவக்கோட்டை: டிக்டாக் வினிதா, லேடீஸ் ஹாஸ்டலில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்பி விட்டதாக சொல்லப்பட்ட நிலையில், அவரை தேடும் பணி மும்முரமாக நடப்பதாக கூறப்படுகிறது. மாயமாகும்போது, ஹாஸ்டல் வார்டனின் செல்போன், 1000 ரூபாய் பணத்தையும் சேர்த்து கொண்டு போய்விட்டாராம்!
தேவகோட்டை அருகே கடம்பா குடியைச் சேர்ந்த வினிதா என்ற 20 வயது பெண்ணுக்கு லியோ என்பவருடன் திருமணம் ஆனது.
ஆனால் திருவிழாக்களில் டான்ஸ் ஆடும் பெண் தோழி அபியுடன் பழகக்கூடாது, அவருடன் சேர்ந்து டிக்டாக் வீடியோ செய்யக்கூடாது என்று வினிதாவின் கணவர், தாயார் அட்வைஸ் செய்தனர். இந்த பேச்சை கேட்காத வினிதா, தன்னுடைய அக்காவின் 20 சவரன் நகையை எடுத்துக் கொண்டு, அபியுடன் ஓடிவிட்டார் வினிதா.

விசாரணை
இறுதியில் போலீசார் தேடுகிறார்கள் என்று தெரிந்ததும், தேவக்கோட்டை ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தார். இதனால் 2 தினங்களாக மகளிர் போலீசார் ஸ்பெஷல் கேர் எடுத்தே விசாரித்தனர். அப்போதுதான், அபியுடன் தான் ஓடியதையும், 20 சவரன் நகையை தந்ததையும், ஸ்டேஷன் வாசல் வரை வந்த தோழிகள் அபியும், சரண்யாவும், உள்ளே வராமல் அப்படியே திரும்பி சென்றுவிட்டதாகவும் கூறினர்.

சரண்யா
இதையடுத்து போலீசார், அபி, சரண்யாவை செல்போனில் பேசி, தேவக்கோட்டைக்கு விசாரணைக்கு வரும்படி சொன்னார்கள். ஆனால் 2 பேருமே வரவில்லை. அதனால், அவர்களை கைது செய்து விசாரிக்க தனிப்படை போலீசார் திருவாரூர் மற்றும் கரூருக்கு விரைந்தனர்.

எஸ்கேப்
இதனிடையே, விசாரணை முடியும்வரை, வினிதாவை காரைக்குடியில் உள்ள மகளிர் ஹாஸ்டலில் தங்க வைத்தனர். ஆனால் அங்கிருந்து வினிதா எஸ்கேப் ஆகி விட்டார். போகும்போது, ஹாஸ்டல் வார்டனின் செல்போன், 1000 ரூபாய் பணத்தையும் கொண்டு போயுள்ளார். இது பற்றி வடக்கு ஸ்டேஷல் புகார் தரப்பட்டதையடுத்து, இப்போது வினிதாவை தேடும்பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தேடல்
அதேபோல, அபி, மற்றும் சரண்யாவை விசாரிக்க சென்றபோது, அவர்களும் அங்கு இல்லை என்று தெரியவந்துள்ளது. அதனால் அபி, வினிதா, சரண்யா 3 பேரையுமே போலீசார் தேடி வருகிறார்கள் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications