சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது நம் அம்மாவின் ஆட்சி அல்ல.. எடப்பாடி அம்மாவின் ஆட்சி.. தினகரன் கிண்டல்

Google Oneindia Tamil News

Recommended Video

    எடப்பாடியை துவம்சம் செய்யும் டிடிவி- வீடியோ

    சிவகங்கை: தமிழகத்தில் 33 எட்டப்பர்கள் இருக்கின்றார்கள். அவர்களில் பெரிய எட்டப்பர் பழனிச்சாமி மற்றொருவர் பன்னீர் செல்வம் என சிவகங்கையில் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தல் அமமுக வேட்பாளர் மாரியப்பன் கென்னடி, சிவகங்கை நாடாளுமன்ற வேட்பாளர் தேர்போகி பாண்டி ஆகியோரை ஆதரித்து அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் பிரசாரம் செய்தார்.

    அப்போது அவர் கூறுகையில் 6 ம் கிளாஸ் படிக்காதவர் டாடி. அம்மா யாருடன் கூட்டணி வைக்க கூடாது என்று கூறினார்களோ அவர்களுடன் கூட்டணி வைத்து அம்மாவின் ஆட்சி என்று கூறுகின்றனர்.

    கடைசியில கரு பழனியப்பன் திமுகவா.... நான் கூட சிவப்பு சிந்தனையாளர்-னு நினைச்சேன்.. கஸ்தூரி கிண்டல்கடைசியில கரு பழனியப்பன் திமுகவா.... நான் கூட சிவப்பு சிந்தனையாளர்-னு நினைச்சேன்.. கஸ்தூரி கிண்டல்

    ஜெ. படத்தை பயன்படுத்தக் கூடாது

    ஜெ. படத்தை பயன்படுத்தக் கூடாது

    அம்மாவின் ஆட்சி என்று கூறினால், அது எடப்பாடி அம்மாவின் ஆட்சி என்று தான் சொல்ல வேண்டும். ஜெயலலிதாவின் படத்தை பயன்படுத்த கூடாது.

    மதம்

    மதம்

    மே 23 க்கு பிறகு எடப்பாடி ஆட்சியை மக்கள் முடித்து விடுவார்கள். துரோகத்திற்கு சின்னம் வைக்க வேண்டும் என்றால், பன்னீர் செல்வத்தையும், எடப்பாடியையும்தான் வைக்க வேண்டும். இந்து மதத்தை பாதுகாக்க தேவையில்லை, அதை யாரும் அழிக்கமுடியாது.

    பழனிச்சாமி

    பழனிச்சாமி

    கடந்த மாதம் தமிழகத்தில் அரசு என்று இருக்கிறதா? அது செயல்படாத அரசாக உள்ளது என்று கூறிய ஹெச். ராஜாவிற்கு, பழனிச்சாமி ஓட்டுக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

    தத்தளிப்பு

    தத்தளிப்பு

    பாதுகாப்பு கொடுக்கும் போலீசே இன்னும் 3 மாதங்களில் இவர்களை அழைத்து செல்வார்கள். ஆட்சியாளர்கள் ஜெயலலிதாவை மறந்துவிட்டார்கள். இத்தேர்தலை விட்டால் நல்ல வாய்ப்பு இல்லை. இல்லை என்றால் மோடி தமிழ்நாட்டை தத்தளிக்கவிட்டு விடுவார் என்றார் டிடிவி தினகரன்.

    English summary
    TTV Dinakaran says that its not Jayalalitha's regime, its Edappadi Palanisamy's regime.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X