அதிமுக அணைய போகும் விளக்கு.. அதான் பிரகாசமாக எரிகிறது.. ஜூன் 4க்கு அப்புறம்.. விளாசிய அண்ணாமலை
சிவகங்கை: அணைய போகும் விளக்கு தான் பிரகாசமாக எரியும்.. அதனால் விமர்சனங்கள் ஏன் கடுமையாக இருக்கிறது என்றால், அந்த விளக்கு அணைய போகிறது என்று தான் அர்த்தம். ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு அதிமுக என்ற கட்சி எங்கே இருக்கிறது என்று பார்ப்போம் என்று அண்ணாமலை கூறினார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிவகங்கையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு விஷயத்தை எல்லாரும் புரிஞ்சுக்க வேண்டும். அந்த பாறை, அங்கு இருக்க கூடிய விவேகானந்தர் மண்டபம் என்பது, முழுவதுமாக விவேகானந்த கேந்திரா. அது ஒரு தனியார் அமைப்புக்கு சார்ந்தது. பெரிய போராட்டத்திற்கு பிறகு அந்த விவேகானந்தர் பாறைக்கு மேலே விவேகானந்தர் தியான மண்டபம் கட்டப்பட்டது.
இது ஒரு தனியார் நிகழ்வாக, அங்கு இருக்கக்கூடிய தனியார் அமைப்புகள் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி அங்கு சென்று இருக்கிறார். இதனால் தான் இங்க பாஜக தொண்டர்கள் கூட அங்கு செல்லவில்லை. தனி நிகழ்வாக, அவருடைய சொந்த நிகழ்வாக அங்கு சென்றிருக்கிறார். இதற்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதனால் தான் தான் அரசும் கூட எங்களுடைய அனுமதி பெற தேவையில்லை என்று சொல்லிவிட்டது.
தேர்தல் பிரசாரம் முடியும் நாளில் கூட இங்கு இரு பெரும் தலைவர்கள் தமிழ் மண்ணில் இருக்கின்றார்கள். தேர்தல் தொடங்கியதும் தமிழகத்தில் தான். தமிழகத்தில் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணியின் பங்கு என்பது அதிகமாக இருக்கும் என்று நம்புகிறோம். ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு அதிமுக கட்சி எங்கே இருக்க போகிறது என்பது தெரியும்.
ஜூன் 4 ஆம் தேதியில் தெரியும். பாஜக எத்தனை இடத்தில் ஜெயிக்க போகிறது என்று.. அதிமுக எத்தனை இடத்தில் ஜெயிக்க போகிறது என்று. இதனால் எப்போதும் எல்லாருக்கும் தெரியும், அணைய போகும் விளக்கு தான் பிரகாசமாக எரியும் என்று.. அதனால் விமர்சனங்கள் ஏன் கடுமையாக இருக்கிறது என்றால், அந்த விளக்கு அணைய போகிறது என்று தான் அர்த்தம்.
ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு நீங்கள் எங்கே இருக்க போறீங்க.. நான் எங்கே இருக்க போகிறேன் என்பது தெரியும். எந்த கட்சி தமிழகத்தில் மக்கள் மனதை பிடித்திருக்கிறது. எந்த கட்சி தமிழகத்தில் வளர்ந்திருக்கிறது. எந்த கட்சியின் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கிறது என்று பார்க்கத்தான் போகிறோம்.
எங்களுடைய கடமையை செய்திருக்கிறோம். மக்கள் எங்களுக்கு ஆதரவு அளித்தார்கள் என்று நம்புகிறோம். நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம். ஜூன் 4 ஆம் தேதி பார்ப்போம். எங்களுடைய வெற்றி என்பது தனிப்பட்ட மனிதனுடைய வெற்றி கிடையாது. தமிழகத்திற்கு உழைக்க வேண்டும். தமிழகத்திற்கு தங்கள் பங்களிப்பு இருக்கனும். தமிழக எம்பிக்கள் அதிகமாக இருந்தால் பணி விரைவாக நடக்கும் என்பதற்காக தான் இந்த வெற்றி. இவ்வாறு அவர் கூறினார்.
-
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications