விஜய் மாநாடு.. வந்து விழுந்த கேள்வி! துளியும் யோசிக்காமல் ஹெச். ராஜா தந்த பதில்! இப்படி சொல்லிட்டாரே

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.. அவரது கட்சியின் முதல் மாநாடு இன்று நடைபெறுகிறது. இதற்கிடையே விஜய் அரசியல் தொடர்பான கேள்விக்கு பாஜகவின் ஹெச் ராஜா, சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், உதயநிதியையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சினிமா நட்சத்திரங்கள் அரியலுக்கு வருவது தமிழ்நாட்டிற்குப் புதிது இல்லை.. எம்ஜிஆர், ஜெயலலிதா தொடங்கி பலரும் அரசியலுக்கு வந்துள்ளனர். அதன்படி இப்போது விஜயும் அரசியல் களத்தில் நுழைந்துள்ளார்.

tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

விஜய் அரசியல்: அவரது கட்சியின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. இதற்காக இன்று காலை முதலே தமிழக வெற்றி கழக கட்சி தொண்டர்கள் அங்கு விரைந்து வருகிறார்கள். இதற்கிடையே விஜய் அரசியல் குறித்து பாஜகவின் ஹெச் ராஜா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். மெர்சல் பட ரிலீஸான போது அதில் இருந்த சில வசனங்கள் சர்ச்சையானது. அப்போது விஜய்யை மிகக் கடுமையாக ஹெச் ராஜா சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் மருது பாண்டியன் 223வது குருபூஜை நடைபெற்றது. இதில் பாஜகவின் ஹெச் ராஜா கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஹெச் ராஜா, விஜய் அரசியல் குறித்து சில முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். விஜய் அரசியல் குறித்த கேள்விக்கு அவர், விஜய் புதிதாக விஜய் கட்சி தொடங்குவது அவசியமா இல்லை அவசியமற்றதா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

ஹெச் ராஜா: மேலும், விஜய் கொள்கை என்ன என்பதும் அவர் தேசியவாத பாதையில் செல்லப் போகிறாரா இல்லை மாநில வாதம் பேசப்போகிறாரா என்பதைப் பொறுத்தே கருத்துச் சொல்ல முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் பேசுகையில், "யார் அரசியலுக்கு வந்தாலும் மக்கள் சேவை செய்ய வந்தாலும் அந்த எண்ணத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள் எப்போதும் இருக்கும்.

விஜய் அரசியல் குறித்துக் கேட்கிறீர்கள்.. அவர் கொள்கை என்ன சித்தாந்தம் என்ன.. தேசிய பாதையில் போகப் போகிறாரா? அல்லது மாநில வாதம் பேசப்போகிறாரா என்பதை அவர் கொள்கையை விளக்கிய பிறகே தெரிய வரும். அவர் இப்போது அரசியலுக்கு வந்துள்ள நிலையில், அது அவசியம் தானா இல்லை தேவையில்லாததா என்பதை எல்லாம் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

உதயநிதி விவகாரம்: அவர் மேலும் பேசுகையில், "ஆளுநர் நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரத்தில் என்னவெல்லாம் பேசினார்கள். இப்போது உதயநிதி நிகழ்ச்சியில் என்ன நடந்து இருக்கிறது.. ஆளுநர் நிகழ்ச்சியை வைத்து அரசியல் செய்தவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.. திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும் தகுதி இல்லை.. தேசியத்தைப் பெரிதாக கருதுபவர்கள் மட்டுமே தமிழ் தாய் வாழ்த்தை மதிப்பார்கள்.

தூர்தர்ஷன் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை.. அந்த நிகழ்ச்சியில் ஏதோ ஆளுநரே தமிழ்த் தாய் வாழ்த்தை வேண்டும் என்றே தவறாகப் பாடியது போலப் பரப்பினார்கள். ஆனால், உண்மையில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை தூர்தர்ஷன் பணியாளர்கள் தான் பாடினார்கள்.. ஆனால், இதற்காகவே ஆளுநரை மாற்ற வேண்டும் என்றெல்லாம் உதயநிதி கூறினார்.. இப்போது உதயநிதி நிகழ்ச்சியிலும் இது நடந்துள்ளது.. இப்போது உதயநிதி ஸ்டாலினை முதல்வர் டிஸ்மிஸ் செய்வாரா!" என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+