சீன் மாறுதே.! "சீமான் நல்ல நண்பர் தான்.." உருவாகும் புது கூட்டணி? நறுக்கென பதில் சொன்ன ஹெச் ராஜா
சிவகங்கை: பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஹெச் ராஜா, சீமான் உடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சியமைத்து 9 ஆண்டுகள் நிறைவடைகிறது. அடுத்தாண்டு மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், தேர்தல் பணிகளை பாஜக இப்போதே ஆரம்பித்துவிட்டது.
அதேபோல மோடி அரசின் 9 ஆண்டு சாதனையை பொது மக்களிடம் கொண்டு சேர்க்க அக்கட்சி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன்படி சிவகங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹெச் ராஜா கலந்து கொண்டார்.

ஹெச். ராஜா: சிவகங்கையில் நடந்த தனியார் அரங்கில் நடந்த இந்த நிகழ்வில், அரசு நலத்திட்டங்களை விளக்கும் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை ஹெச் ராஜா தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் பல்வேறு விஷயங்கள் குறித்தும் முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். நடிகர்கள் அரசியலுக்கு வருவது, சிதம்பரம் தீட்சிதர்கள் விவகாரம், சீமான் எனப் பல விவகாரங்கள் குறித்தும் பேசினார்.
அவர் அங்கே பேசுகையில், "சிதம்பரம் தீட்சிதர்கள் மீது பொய்யாக வழக்கைப் பதிவு செய்துள்ளனர். அறநிலையத்துறை அங்குச் செல்லவே அதிகாரமில்லை. சட்ட திட்டங்கள் தெரிந்து நடக்க வேண்டும். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோயிலுக்குள் அதிகாரிகள் எப்படிச் செல்ல முடியும். இந்த சட்டங்கள் குறித்து அறியாதவர் அமைச்சராக இருப்பதே இதற்குக் காரணம்" என்று அமைச்சர் சேகர்பாபுவை விமர்சித்துப் பேசினார்.
அட்டாக்: தொடர்ந்து காங்கிரஸ் பக்கம் திரும்பிய அவர், "இத்தனை ஆண்டுகளாகக் காங்கிரஸை கொள்ளையடித்தவர்களில் ஒருவர் ப. சிதம்பரம்.. அவர் பற்றி எல்லாம் பேசத் தேவையில்லை. 2014 ஆண்டில் மட்டும் மோடி ஆட்சியைப் பிடிக்கவில்லை என்றால் இந்தியா மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும். பாஜகவை பொறுத்தவரை இங்கே மோடி தான் பிரதமர் வேட்பாளர். ஆனால், பீகாரில் ஏதோ எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்தியதாகச் சொல்கிறார்கள். அங்கே பிரதமர் வேட்பாளர் யார்" என்று அட்டாக் மோடிற்கு சென்றார்..
தொடர்ந்து பேசிய அவர், "சினிமா பாப்புலாரிட்டி மட்டுமே அரசியலுக்கு உதவாது. அதைத் தாண்டி எம்ஜிஆர், ஜெயலலிதா போல மக்களுக்காக இறங்கி வேலை பார்த்திருக்க வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா வென்றார்கள் என்பதற்காகவே சினிமா பாப்புலாரிட்டியை மட்டும் வைத்து அனைவரும் வெல்ல முடியாது. இதற்குச் சிவாஜி, டிஆர், பாக்கியராஜ் என பல உதாரணங்கள் உள்ளன. இருந்தாலும் அவருக்கும் அரசியலுக்கு உரிமை இருக்கிறது.
நாம் தமிழர் உடன் கூட்டணி: சீமான் பேசும் பல விஷயங்களை நான் அவருக்கு முன்பே பேசியுள்ளேன். அவர் டிவி நிகழ்ச்சியை நடத்தினாரே.. அப்போதே அதில் நான் கலந்து கொண்டு இருக்கிறேன். இருவருக்கும் இடையே நல்ல உறவு இருந்தது. அவர் பாஜகவை வரவேற்கிறேன் என்றே குறிப்பிட்டுள்ளார்.
சீமான் தமிழ் தேசியத்தைக் கைவிட்டால் நெருங்கி வரலாம். தமிழ் தேசியம் என்பது பிரிவினைவாதம், இந்தியத் தேசியம் என்பதே ஒற்றுமை. இதை அவர் உணர வேண்டும். இதைத் தவிர்த்துப் பார்த்தால் இருவரும் நல்ல நண்பர்கள் தான். அவரும் திராவிடத்தை ஏற்கவில்லை.. நாங்களும் ஏற்கவில்லை. நாம் தனியாக இருந்தாலும் எதையும் செய்ய முடியாது சீமான் பகுத்தறிவோடு சிந்தித்து தமிழ் தேசியத்தைக் கைவிட்டால் வரவேற்போம். அதன் பிறகு அடுத்த கட்ட விஷயங்கள் குறித்துப் பேசலாம்" என்று அவர் தெரிவித்தார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications