பதறுதா திமுக? அதிமுகவை அழைத்த திருமா! உதயநிதியின் முதல் ரியாக்ஷன் இதுதான்! பரபரக்கும் தமிழக அரசியல்
சிவகங்கை: அக்டோபர் 2ம் தேதி நடைபெற உள்ள மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக கூட பங்கேற்கலாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதனால் திமுக கூட்டணி முறிகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தான் அதிமுகவை அழைத்த திருமாவளவன் விவகாரம் பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் முதல் ரியாக்ஷனை கொடுத்துள்ளார்.
அக்டோபர் 2.. காந்தி ஜெயந்தி தினமான அன்று திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை கள்ளக்குறிச்சியில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாளவன் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக பங்கேற்கலாம் என்று பொதுவாக அழைப்பு விடுத்தார். இதுதொடர்பாக திருமாவளவன் அளித்த பேட்டியில் கூறியதாவது:
மதுவிலக்கு கொண்டு வரும் விஷயத்தில் தமிழகத்தில் தயக்கம் உள்ளது. அதிமுகவும், திமுகவும் இதில் தயக்கம் காட்டுகிறது. தயக்கம் உள்ளவர்கள் அனைவரும் மாநாட்டுக்கு வரலாம். அதிமுக கூட வந்து பங்கேற்கலாம். அதிமுக கூட வரலாம். அனைத்து கட்சிகளும் வரலாம். மது ஒழிப்பில் உடன்பாடு உள்ள அனைவரும் ஒரே மேடையில் நிற்க வேண்டிய தேவை உள்ளது. இது தேர்தலுக்கானது அல்ல. இதனை தேர்தலுடன் சம்பந்தப்படுத்த வேண்டாம்'' என கூறியுள்ளார்.
தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் உள்ளது. தற்போது விசிக நடத்தும் இந்த மாநாடு என்பது மதுவிலக்கை கொண்டு வரும் வகையில் ஆளும் திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கும். இந்நிலையில் தான் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்து இருப்பது பெரும் விவாதமாக மாறி உள்ளது. அதேபோது திமுக கூட்டணியில் இருந்து வெளியேற திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி முடிவு செய்துள்ளதா? என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது.
இந்நிலையில் தான் சிவகங்கையில் இன்று விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‛‛சிவகங்கை மாவட்டத்தில் அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டது. எந்தெந்த திட்டங்கள் முடியும் தருவாயில் உள்ளது? எந்தெந்த திட்டங்கள் சீக்கிரமாக முடிக்க வேண்டும்? சுணக்கம் ஏதாவது இருக்கிறதா? என்பது தொடர்பாக மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் அமைச்சர் பெரியகருப்பன் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. பல அறிவுரைகள் வழங்கப்பட்டது. ஆய்வு கூட்டத்தின் அறிக்கை முதல்வரிடம் அளிக்கப்பட உள்ளது'' என்றார்.
இந்த வேளையில், ‛‛விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கும்படி அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதே'' என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு உதயநிதி ஸ்டாலின், ‛‛அது அவங்க இஷ்டம்ங்க.. பங்கேற்பது அவங்க இஷ்டம்.. அவர்களிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்'' என கூறிவிட்டு வேகமாக புறப்பட்டு சென்றார்.
-
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications