"மசாஜ் சென்டர்".. சிக்க போகும் முக்கிய பிரமுகர்கள்.. யாரந்த "கருப்பு ஆடுகள்".. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்
மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடந்துள்ள நிலையில், சில விஐபிகளும் சிக்க போகிறார்களாம்
சிவகங்கை: காரைக்குடி பகுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் செய்த 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.. இதுகுறித்த விசாரணையும் துவங்கி உள்ளனர்.
தமிழகத்தில் குற்ற செயல்கள் எங்கு நடந்தாலும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் காவல்துறைக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்..
அதேபோல, பாலியல் சம்பவங்கள் நடைபெறக்கூடிய பியூட்டி பார்லர்கள், மசாஜ் சென்டர்கள், பண்ணை வீடுகளிலும் அதிரடி சோதனைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது..

ஸ்பா ஷாப்ஸ்
சென்னை மாநகரில், சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகின்றன.. இந்த சென்டர்களில் ரகசியமாக பாலியல் தொழில் நடப்பதாக, கடந்த வருடம் முன்பு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு புகார்கள் வந்தவண்ணம் இருந்தது. இதையடுத்து, அனுமதியின்றி நடத்தப்படும் மசாஜ் சென்டர்கள் மற்றும் ஸ்பா குறித்து அறிக்கை அளிக்கும்படி உளவுத்துறைக்கு, கமிஷனர் உத்தரவிட்டிருந்த நிலையில், அனுமதி பெறாமல் நடத்தப்படும் மசாஜ் சென்டர்கள் குறித்த புள்ளிவிவரங்களுடன் கூடிய அறிக்கையையும் போலீசாரும் அளித்திருந்தனர்.

12 தனிப்படை
அந்த அறிக்கையில், அனுமதியின்றி அரசியல் கட்சி பிரமுகர்கள் மூலம் நடத்தப்படும் மசாஜ் சென்டர்கள் குறித்தும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததாம். இதையடுத்துதான், 12 தனிப்படையின் கீழ் 150 குழுவை அமைத்து, அண்ணாநகர், விருகம்பாக்கம், கேகே நகர், தி.நகர், அடையார், திருவான்மியூர், கிண்டி உட்பட சென்னை முழுவதும் தனிப்படையினர் 151க்கும் மேற்பட்ட ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்த பல இளம் பெண்களையும் போலீசார் மீட்டனர்... அப்போது, அதில், ஒரு அதிர்ச்சி தகவல் கசிந்தது..

கருப்பு ஆடுகள்
இந்த சோதனையில் சட்டவிரோதமாக மசாஜ் சென்டர் நடத்தியதில் சில "மாஜிக்களும்" அடங்குவார்களாம்.. இவர்களுக்கு இந்த ஸ்பா & மசாஜ் சென்டர்களுடன் நேரடி தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளதாகவும், இவர்களுக்கு சில கருப்பு ஆடுகள் மறைமுகமாக உதவியாக இருந்துள்ளதாகவும் தெரியவந்தது.. இது தொடர்பான விசாரணைகள் மேலும் விரிவடைந்து வரும் நிலையில்தான், போலீசாரும் விபச்சார கும்பலை குறி வைத்து கைது செய்து வருகிறார்கள்..

மாஜிக்கள்
வெளி மாவட்டங்களில் இருந்து, வேலை தேடி கொண்டிருக்கும் பெண்களுக்கே பெரும்பாலும் இதுபோன்ற கும்பல்கள் குறி வைத்து வருகிறது.. அப்பாவி இளம் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகளை சொல்லியே அவர்களை கட்டாயப்படுத்தி விபச்சார தொழிலில் ஈடுபடுத்தி, கை நிறைய காசு பார்த்தும் வருகிறது.. இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஒரு கும்பல் சிக்கி உள்ளது.. இங்கு செயல்படும் மசாஜ் சென்டர்களில் விபச்சாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

மசாஜ் சென்டர்
இதையடுத்து காரைக்குடி பகுதியில் உள்ள மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.. கல்லூரி சாலையில் உள்ள மசாஜ் சென்டரில் போலீசார் ஆய்வு செய்தபோது அங்கு விபச்சாரம் நடப்பது தெரியவந்தது... விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களையும் மீட்டனர். மசாஜ் சென்டர் ஓனர் அருட்செல்வன், மனைவி நித்யஸ்ரீ மங்கையர்கரசி 38, கஸ்டமர்கள் ஏகலைவன் 42, காரைக்குடி ராஜேசுவரன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.. இவர்களிடமிருந்து 3 போன்கள், ரூ.3 ஆயிரத்து 500 ரொக்கம், பைக் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன..

கஸ்டமர்கள்
இதேபோல் காரைக்குடி பெரியார் சிலை அருகே உள்ள மசாஜ் சென்டரிலும் விபசாரத்திலும் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களை போலீசார் மீட்டனர். விபச்சாரம் நடத்திய மசாஜ் சென்டர் மேனேஜர் பூமதி 36, கஸ்டமர் காமராஜ் 41, ஆகியோரை கைது செய்தனர்... தலைமறைவாக உள்ள ஓனர் சந்தோஷ் என்பவரையும் தேடி வருகின்றனர்... காரைக்குடியில் கடந்த சில மாதங்களாகவே மசாஜ் சென்டர்கள் புற்றீசல்கள் போல் அதிகரித்து வருவதாக சொல்கிறார்கள்..

விஐபி யார்
வறுமையை பயன்படுத்தி பெண்களை விபசாரத்தில் மசாஜ் சென்டர்கள் பயன்படுத்தி வருகிறது. இப்போதைக்கு 2 மசாஜ் சென்டர்களின் ஓனர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள செல்போன்களை போலீசார் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.. காரணம், அதில் முக்கிய பிரமுகர்களின் செல்போன் நம்பர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.. இது தொடர்பாக விசாரணையை துரிதப்படுத்தி வருகிறார்கள் போலீஸ். யார் யார் சிக்க போகிறார்களோ? என்ற எதிர்பார்ப்பும் கிளம்பி வருகிறது..!!
-
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்!












Click it and Unblock the Notifications