Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஹவுஸ்ஓனர்தான் காரணம்".. சுவரில் எழுதி வைத்து விட்டு.. மகன், மகளை கொன்று தாயும் தற்கொலை!

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: "ஹவுஸ் ஓனர் தான் காரணம்" என்று சுவற்றில் கொட்டை எழுத்தில் எழுதி வைத்துவிட்டு, குழந்தைகளையும் விஷம் வைத்து கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார் காளீஸ்வரி... இந்த சம்பவம் சிவகங்கையில் நடந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், அதப்படக்கி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன்.. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.. இவரது மனைவி காளீஸ்வரி, 9 வயது மகன், 12 வயது மகளுடன் சிவகங்கை குறிஞ்சி நகரில் வசித்து வருகிறார்.. ஒரு வீட்டை குத்தகைக்கு எடுத்து அங்குதான் தங்கி வந்துள்ளனர். இந்தநிலையில், ஹவுஸ் ஓனர் குத்தகை பணத்தை திருப்பி தராமல் உடனே, வீட்டை காலி செய்ய சொல்லி உள்ளதாக தெரிகிறது.

 woman committed suicide along with her children near sivagangai

இதை பற்றி கேட்டதற்கு, குத்தகை பணத்தை தந்துவிட்டேன் என்று சொன்னதாகவும் கூறப்படுகிறது.. இதனால் அதிர்ச்சி அடைந்த காளீஸ்வரி, குழந்தைகளை அழைத்து கொண்டு எங்கே போவது என்றே தெரியாம விழித்துள்ளார்.. அதனால் மனமுடைந்து காளீஸ்வரி மகன், மகளுக்கு விஷம் தந்து கொன்றுவிட்டார்.. பிறகு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்து சிவகங்கை நகர் போலீசார் விரைந்து வந்தனர்.. 3 சடலங்களையும் மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர்.. பிறகு விசாரணையை ஆரம்பித்தனர்.. அப்போதான், வீட்டின் சுவற்றில் தன் சாவுக்கு ஹவுஸ் ஓனர்தான் காரணம் என்று காளீஸ்வரி தன் கைப்பட எழுதி வைத்திருந்ததை கவனித்தனர்.

ஹவுஸ் ஓனர் கார்த்திகேயன், நாகஜோதி, சுந்தரி ஆகியோர் பெயர்கள் சுவற்றில் இருந்தன.. அதனால் அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. பணத்தை ஹவுஸ் ஓனர் தந்துவிட்டதாக சொன்ன நிலையில், காளீஸ்வரி ஏன் தற்கொலை செய்தார் என தெரியவில்லை.. இந்த வீட்டில் 3 வருடமாக தங்கி வருகிறாராம்.. உண்மை தன்மையை போலீசார் கண்டறிந்து வருகின்றனர்.

லாக்டவுன் சமயத்தில் வேலை, வருமானம் இல்லாத சூழல் உள்ளது.. பலரால் வாடகை தர முடியாமல் அவதியில் உள்ளனர்.. வாடகைதாரர்கள் மட்டுமின்றி, வீட்டு உரிமையாளர்களும் இதனால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். வாடகை மட்டுமில்லை, பேங்க் லோன், கடன், இஎம்ஐ இப்படி எதற்குமே யாராலுமே பணம் கட்ட முடியாத சூழல் உள்ளது.. இதை மைய பிரச்சனையாக வைத்து தற்கொலைகளும், கொலைகளும் பெருகி வருவது கவலையை தந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+