எம்ஜிஆர் முகத்தை கூட பார்த்திராதவர்களே.. நான் அவர் மடியில் வளர்ந்தவன்.. நினைவிருக்கட்டும்.. கமல்
சிவகாசி: எம்ஜிஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே நான் அவர் மடியில் வளர்ந்தவன், அதை நினைவு வைத்துக் கொள்ளுங்கள் என கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று முன் தினம் மதுரையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
நேற்றைய தினம் மதுரை மேலமாசி வீதி உள்பட பல இடங்களில் அவர் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது அவர் கூறுகையில் மதுரையை இன்னொரு தலைநகராக அறிவிப்போம். எம்ஜிஆக் கனவின் நீட்டிதான். எம்ஜிஆரின் தொடர்ச்சி நான்தான். எம்ஜிஆரின் கனவே நிறைவேற்றுவேன்.
|
பெரியார்
காந்தி மற்றும் பெரியோர் வாக்கு அரசியலில் ஈடுபடவில்லை என்றும் ஆனால் எம்ஜிஆர் போன்றோர் வாக்கு அரசியலில் ஈடுபட்டு மிகப்பெரிய வெற்றி பெற்று மக்களுக்கு சேவை செய்தார்கள் என்றார். இதை கேட்ட அங்கிருந்த மக்கள் கமல்ஹாசனின் பேச்சுக்கு நீண்ட நேரம் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

பாஜக
முன்னதாக ரஜினிகாந்த் ஒரு கல்லூரி விழாவில் கடந்த 2018-ஆம் ஆண்டு பேசிய போது எம்ஜிஆர் போல் யாராலும் ஆக முடியாது. இன்னொரு முறை அவர் பிறந்தால்தான் உண்டு. ஆனால் எம்ஜிஆர் கொடுத்த நல்லாட்சியை என்னால் தரமுடியும் என தெரிவித்திருந்தார். அது போல் பாஜகவின் வேல்யாத்திரையில் ஒரு புரோமோ வீடியோ வெளியிடப்பட்டது. அதில் பொன்மனச்செம்மலின் வடிவமாய் பிரதமர் மோடி என சித்தரிக்கப்பட்டிருந்தது.

அதிர்ச்சி அடைந்த அதிமுக
இதை கண்ட அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். எம்ஜிஆரின் பெயரை ரஜினி, கமல், பாஜகவினர் சொந்தம் கொண்டாடுவதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறுகையில் எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக உயிர்ப்புடன் இருக்கும் நிலையில் அவரது பெயரை பிற கட்சிகள் பயன்படுத்தி பிற கட்சிகள் வாக்கு சேகரிப்பது நாகரீகமல்ல என தெரிவித்திருந்தார்.

எம்ஜிஆர் முகம்
இதற்கு கமல்ஹாசன் பதிலடி கொடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் புரட்சித் தலைவர் திமுகவில் இருந்தபோது திமுக திலகம் அல்ல; தனிக்கட்சி துவங்கிய பிறகு அதிமுக திலகமும் அல்ல. என்றென்றும் அவர் மக்கள் திலகம். எம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும்.
-
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
கமல் கோரிக்கையை நிராகரித்த விஜய்.. மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன?












Click it and Unblock the Notifications