சிவகாசி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சொந்த வேலைகளில்தான் முதல்வர் கவனம் செலுத்துகிறார்.. சிவகாசியில் பட்டாசாக வெடித்த எடப்பாடி

முதலமைச்சர் மக்களுக்காக வேலை பார்க்காமல் சொந்த வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

Google Oneindia Tamil News

சிவகாசி: திமுக ஆட்சிக்கு வந்து எட்டு மாதங்களாக எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களுக்காக வேலை செய்யாமல் சொந்த வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நகர்புற உள்ளாட்சித்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. பல முனை போட்டி நிலவுகிறது. அதிமுக, திமுக, பாஜக, பாமக, தேமுதிக, அமமுக, மநீம, நாம்தமிழர், விஜய் மக்கள் இயக்கம் என பலரும் களத்தில் உள்ளதால் பலமுனை போட்டி நிலவுகிறது. அதிமுக உடன் சிறு கட்சிகள் கூட்டணியில் இருந்தாலும் அனைத்து வார்டுகளிலும் இரட்டை இலையிலேயே போட்டியிடுகின்றனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மமக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம் - சனிக்கிழமையும் மனு அளிக்கலாம் நகர்புற உள்ளாட்சித் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம் - சனிக்கிழமையும் மனு அளிக்கலாம்

வேட்புமனு தாக்கல் கடந்த 4ஆம் தேதி முடிந்தது. மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. சரியான ஆவணங்கள் இல்லாத பல மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாளாகும். இன்றைய தினம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். தேர்தல் பிரச்சார களத்தில் அனல் பறக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக இப்போது எதிர்கட்சியாக உள்ளதால் பிரசார களத்தில் புதிய யுக்தியை கையாளத்தொடங்கியுள்ளது.

சிவகாசியில் இபிஎஸ் பிரசாரம்

சிவகாசியில் இபிஎஸ் பிரசாரம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது பிரசாரத்தை தொடங்கினார். எடப்பாடி பழனிச்சாமிக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் சார்பாக மாலை அணிவித்து ஆண்டாள் கிளி கொடுக்கப்பட்டது. இந்த பிரச்சாரத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியும் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சார கூட்டத்தில் முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் அதிமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

எதுவும் செய்யாத திமுக

எதுவும் செய்யாத திமுக

பிரச்சார கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த திமுக அரசு காலம் தாழ்த்தியது. பின்னர் உச்ச நீதிமன்ற அறிவிப்பின் படி நடத்துகிறது எனவும் திமுகவின் 8 மாத கால ஆட்சியில் எந்தவொரு நலத்திட்டங்களையும் செய்யவில்லை என குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிச்சாமி அதற்கு மாறாக அதிமுக அரசு இருந்த போது துவங்கப்பட்ட திட்டங்கள் தான் தற்போது முடிவடைந்துள்ளது.
அதனை தான் தற்போது திமுக திறந்து வருகிறது எனக் கூறினார்.

ஜிம், சைக்கிளிங் செல்லும் ஸ்டாலின்

ஜிம், சைக்கிளிங் செல்லும் ஸ்டாலின்

மேலும் தினமும் காலையில் 3 இடங்களுக்கு செல்கிறார் ஸ்டாலின் பின் அங்குள்ள டீ கடையில் குடிக்கிறார் எனவும் டீ குடிப்பதற்கு, பளு தூங்குவதற்கு, சைக்கிளில் செல்வதற்குமா உங்களை மக்கள் முதல்வர் ஆக்கி உள்ளனர் என விமர்சனம் செய்த எடப்பாடி பழனிச்சாமி. திமுக மக்களிடம் கவர்ச்சிகரமான திட்டங்கள் மற்றும் கவர்ச்சிகரமான பேச்சுகளை பேசி தான் ஆட்சியை பிடித்து இருக்கிறார்கள். கவர்ச்சிகரமாக பேசி ஆட்சியை பிடித்தவர்களிடம் இப்படித்தான் செய்வார்கள் என தெரிவித்தார்.

பொங்கல் தொகுப்பில் தரமில்லை

பொங்கல் தொகுப்பில் தரமில்லை


இன்றை திமுக ஆட்சியாளர்கள் கொள்ளை அடிப்பதை குறிக்கோளாகக் இருக்கிறார்கள் எனவும் ஒவ்வொரு துறையில் எவ்வளவு கொள்ளை அடிக்கலாம் என்பதை பற்றி தான் யோசிக்கிறார்கள் என தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் தொகுப்பில் ரூபாய் மற்றும் தரமான பொருட்கள் கொடுத்தது அம்மா அரசு தான் என தெரிவித்தார். மேலும் கடந்த ஆட்சியில் 5000 ஆயிரம் கொடுக்க சொன்ன ஸ்டாலின் இந்த முறை 100 ரூ குடும்ப அட்டைக்கு கொடுத்தாரா? என கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி, இந்த பொங்கல் பண்டிகையின் போது மக்கள் சீரமப்பட்டார்கள் என தெரிவித்தார்.

 ராஜேந்திர பாலாஜி மீது பொய் வழக்கு

ராஜேந்திர பாலாஜி மீது பொய் வழக்கு

திமுக அரசாங்கம் ஒரு சர்வாதிகார அரசாங்கம். இந்த அரசிடம் நியாயம் எதிர்பார்க்க முடியாது எனவும் கருணாநிதி காலத்தில் இருந்தே அதிமுக மீது பொய் வழக்கு போட்டு வருகிறார்கள். எல்லா வழக்குகளையும் சந்திக்கும் சக்தி அதிமுகவிற்கு உண்டு என தெரிவித்தார். ராஜேந்திர பாலாஜி மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாரோ ஒருவர் வேலை வாங்கி தருவதாக கூறி அந்த பணத்தை ராஜேந்திர பாலாஜியிடம் கொடுத்தார்களாம். அதை கேட்டு பொய் வழக்கு ஒன்றை போட்டு வைத்திருக்கிறார்கள்.

சொந்த வேலை செய்யும் முதல்வர்

சொந்த வேலை செய்யும் முதல்வர்

திமுகவின் 8 மாத ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர் குலைந்து இருக்கிறது எங்கும் கொலை கொள்ளை தான் நடக்கிறது என தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தை ஆளத் தெரியாத ஒரு பொம்மை முதலமைச்சர் நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார் என கடுமையாக விமர்சனம் செய்தார். முதலமைச்சர் மக்களுக்காக வேலை பார்க்காமல் சொந்த வேலையை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் பட்டாசு தொழில் பாதிக்கப்பட்டிருந்த போது சம்பந்த பட்ட அமைச்சரை ராஜேந்திர பாலாஜியுடன் 20 அமைச்சர்கள் இணைந்து மத்திய அமைச்சரை சந்தித்து சரி செய்தனர் எனக் கூறினார்.

நீட் தேர்வு ரத்து

நீட் தேர்வு ரத்து

திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றார்கள் ஆனால் இது வரை செய்யவில்லை.குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குவதாக அறிக்கை விடுத்து 8 மாதம் ஆகியும் வழங்கவில்லை என்றும் தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி, நகை கடன் வாங்கிய 48 லட்சம் பேரில் 13 லட்சம் பேர் தான் தகுதியானவர்கள் என்று அறிவித்து விட்டார்கள் அதனால் 35 லட்சம் பேர் நிராகரிக்கப்பட்டு தற்போது கூடுதல் வட்டியை செலுத்தி வருகிறார்கள் எனவும் திமுகவை ஆட்சியில் அமர்த்தியதற்கு 35 லட்சம் பேர் 12 ஆயிரம் வட்டி என்பது அவர்களுக்கு தண்டனையா எனவும் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார். அதிமுக தலைவர்கள் நேரடியாக பிரச்சார களத்தில் இறங்கி வாக்கு சேகரிக்கும் நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆன்லைன் மூலம் நேரலையில் பிரசாரம் செய்கிறார்.

English summary
AIADMK coordinator Edappadi Palanisamy said the DMK had not implemented any plan for eight months after coming to power. He also accused Chief Minister Stalin of looking after his own work without working for the people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X