கால் வைக்குற இடமெல்லாம்.. ஆபத்து.. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பைனலில்.. இந்தியாவிற்கு 5 சிக்கல்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2023 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணியை செமி பைனலில் வீழ்த்தி பைனலுக்கு சென்று உள்ளது. பைனலில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்ள உள்ளது.

நியூஸிலாந்திற்கு எதிரான செமி பைனலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியா பேட்டிங் எடுத்து தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டியது. முதல் பவர் பிளேவில் 10 ஓவர்களுக்கு 84 ரன்களை இந்திய அணி எடுத்தது.

 5 warnings to India ahead of its 2023 World Cup Finals against Australia

இதை தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயரும் சதம் அடித்தார். வெறும் 70 பந்தில் 8 சிக்ஸ், 4 பவுண்டரி அடித்து 105 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 50 ஓவரில் 397-4 ரன்கள் எடுத்தது. இதையடுத்து நியூசிலாந்து இறங்கி பேட்டிங் செய்தது.

பவுலிங்: அதன்பின் பவுலிங்கில்தான் இந்திய அணி கடுமையாக திணறியது. தொடக்கத்திலேயே ஷமி ஓவரில் நியூசிலாந்து அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. 5.1 மற்றும் 7.4 ஓவரில் ஷமி பந்துகளில் தேவன் கான்வாய், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். ஆனால் அதன்பின் 73 பந்துகள் பிடித்த வில்லியம்சன் 69 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் சதம் அடித்தும் மிட்சல் அவுட் ஆகாமல் பிரஷர் போட்டார்.

மீண்டும் பவுலிங் போட வந்த ஷமி அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்தார்;. கேன் வில்லியம்சன் 69 ரன்களில் ஷமி ஓவரிலேயே அவுட் ஆனார். அதே ஓவரில் டாம் லாதாம் டக் அவுட் ஆனார். அந்த ஓவர்தான் ஆட்டத்தை இந்தியா பக்கம் திரும்பியது. பின்னர் கிளேன் பிலிப்ஸ் 41 ரன்கள் எடுத்து பிரஷர் போட்டாலும் பும்ரா ஓவரில் ஜடேஜாவிடம் அவுட் ஆனார்.

இந்தியா வெற்றி: அதன்பின் மார்க் சாப்மன் குல்தீப் ஓவரில் ஜடேஜாவிடம் மீண்டும் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன்பின் ஷமி ஓவரில் மீண்டும் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து மிட்சல் 134 ரன்களுக்கு அவுட் ஆனார் பின்னர் கடைசியில் ஷமி வரிசையாக 2 விக்கெட் எடுக்க.. 327-10 ரன்கள் எடுத்து நியூசிலாந்து தோல்வி அடைந்தது. ஷமி மட்டும் 7 விக்கெட் எடுத்தார்.

இது போக நேற்று ஆஸ்திரேலியாவிற்கு தென்னாப்பிரிக்காவிற்கும் இடையே செமி பைனல் நடந்தது. இதில் தென்னாபிரிக்கா அடித்த 213 ரன்களை ஆஸ்திரேலியா எளிதாக அடித்து பைனலுக்குள் வந்துள்ளது.

முக்கியமான பைனல்: இந்த நிலையில் பைனலில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வது உறுதியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வதால் கிட்டத்தட்ட இந்த உலகக் கோப்பை 2003 உலகக் கோப்பை போல மாறிவிடும். அதில் பைனலில் நாம் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தோம். அது நடக்காமல் இருக்க பின்வரும் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

1. இந்தியா வெற்றி மிதப்பில் இருக்க கூடாது. வரிசையாக இந்தியா வென்றுவிட்டது. 10க்கு 10 போட்டிகளில் வென்றுவிட்டது. இந்திய அணியின் தொடர் வெற்றிகள் முக்கியமான ஆபத்து ஆகும். இதே மனநிலையோடு போனால் திடீர் தோல்விக்கு அது காரணம் ஆகும். ஏனென்றால் இந்திய வீரர்கள் என்று இல்லை தொடர் வெற்றிக்கு யாருக்குமே மிதப்பை கொடுக்கும். அந்த மிதப்பு காரணமாக வீரர்கள் சொதப்ப வாய்ப்பு உள்ளது. இந்த மனநிலையை ரோஹித்தான் மாற்ற வேண்டும். ஒரு தோல்வியாவது இருந்திருந்தால் பயம் வந்திருக்கும். ஆனால் அந்த பயம் இப்போது அணியில் இல்லை.

2.இந்திய அணி எப்போதுமே லீக் ஆட்டங்களில் நன்றாக ஆடி உள்ளது. ஆனால் செமி, பைனல் போன்ற நாக் அவுட் போட்டிகளில் தோனிக்கு பின்பாக எந்த கேப்டனும் சரியாக ஆடவில்லை. அந்த அழுத்தம் இப்போதும் இந்திய அணிக்கு இருக்கும். அதை சரி செய்ய இந்திய அணி கஷ்டப்பட வேண்டும். இதுவே பெரிய அழுத்தத்தை இந்திய வீரர்களுக்கு கொடுக்கும்.

3. அணியில் மிடில் ஆர்டரில் இன்னுமும் ஒரு இடத்தில் பிரச்சனை உள்ளது. அது சூர்யா குமார் யாதவ் இடம். அங்கே இஷான் கிஷனை இறக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன.. அவர் இன்னும் முழுமையாக பார்மிற்கு திரும்பவில்லை.

4. சிராஜ் இன்னும் பார்மிற்கு திரும்பவில்லை. அவரின் பவுலிங் இன்னும் இந்திய அணிக்கு பின்னடைவாகவே இருக்கிறது.

5. பைனல் என்று வந்துவிட்டால் ஆஸ்திரேலியாவின் ஆட்டம் வேற லெவலில் இருக்கும், இதை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+