என் விஸ்வாசம் கேகேஆர் அணிக்குதான்.. ஓய்வை அறிவித்த ஆண்ட்ரே ரஸல்.. புதிய பொறுப்பு கொடுத்த கொல்கத்தா!
மும்பை: ஐபிஎல் தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திர வீரர் ஆண்ட்ரே ரஸல் ஓய்வை அறிவித்துள்ளார். அண்மையில் கேகேஆர் அணியில் இருந்து ரஸல் ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், அவரை வாங்க மிகப்பெரிய போட்டி நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக சிஎஸ்கே அணிக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக பேசப்பட்டது. ஆனால் திடீரென ஓய்வை அறிவித்து ஏமாற்றம் அளித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஜாம்பவான் வீரராக வலம் வந்த ஆண்ட்ரே ரஸல் ஓய்வை அறிவித்துள்ளார். அண்மையில் கேகேஆர் அணியில் இருந்து ஆண்ட்ரே ரஸல் ரிலீஸ் செய்யப்பட்டிருந்தார். இதனால் ஆண்ட்ரே ரஸல்லை வாங்குவதற்கு சிஎஸ்கே, டெல்லி, லக்னோ உள்ளிட்ட அணிகள் தீவிர முனைப்பு காட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதிலும் சிஎஸ்கே அணியின் அனலிஸ்ட்டான ஏஆர் ஸ்ரீகாந்த், ரஸல் புகைப்படத்தை வைத்து ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். இதனால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் ரஸல் சென்னை அணிக்கு வரப் போகிறார் என்று கனவில் மிதந்து வந்தனர். ஆனால் திடீரென ஆண்ட்ரே ரஸல் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இது கேகேஆர் அணி ரசிகர்களை விடவும், சிஎஸ்கே அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2013ஆம் ஆண்டு கேகேஆர் அணியில் இணைந்த ஆண்ட்ரே ரஸல், 2014 மற்றும் 2024 சாம்பியன் பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார். இந்த நிலையில் ஓய்வை அறிவித்த ரஸல், முக்கியமான விஷயம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
அதில், கேகேஆர் அணியில் இருந்து வெளியேறிய பின், மற்ற அணிகளின் ஜெர்சியில் என்னை பார்ப்பதே வருத்தமாக இருக்கும். சில இன்ஸ்டாகிராம் பதிவுகளில் வேறு ஜெர்சியுடன் பார்த்தேன். அதனால் இரவில் என்னால் தூங்கவே முடியவில்லை. ஐபிஎல் தொடரில் என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து கேகேஆர் நிர்வாகிகளுடன் பேசினேன்.
என் மீது அன்பும், மரியாதையும் வைத்து ஒரு பொறுப்பை கொடுத்துள்ளார்கள். ஆம், கேகேஆர் அணியில் இருந்து எங்கேயும் சொல்லப் போவதில்லை. கேகேஆர் அணியின் பயிற்சியாளர் குழுவில் "பவர் கோச்"ஆக இணைந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் டெல்லி மற்றும் கேகேஆர் ஆகிய இரு அணிகளுக்காக ரஸல் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications