இலங்கை அணியால் அரையிறுதிக்கு வர முடியாது.. அடித்து சொல்லும் அஸ்வின்.. காரணம் என்ன?
மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரில் இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளால் அரையிறுதி சுற்றுக்கு வர முடியாது என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்துள்ளார். இந்த கணிப்புக்கு பின் இருக்கும் காரணங்களையும் அஸ்வின் விளக்கி இருக்கிறார். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
டி20 உலகக்கோப்பை தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி சுற்றுக்கு எந்த அணி முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடர்பாக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் கணிப்புகளை வெளிட்டுள்ளார்.

அதில் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகையில், இலங்கை அணியை பொறுத்தவரை, அவர்களால் டாப் 4க்குள் செல்வது என்பது கடினம் என்று நினைக்கிறேன். சொந்த மண்ணில் லீக் மற்றும் சூப்பர் 8 போட்டிகளில் விளையாடினாலும், இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு தான்.
ஒருவேளை வாழ்வா சாவா போட்டி அமைந்தால், கொஞ்சம் ஸ்பின்னர்களுக்கு சாதகமான பிட்சை உருவாக்க வேண்டும். அப்போதுதான் வெற்றிக்கு சான்ஸ் கிடைக்கும். அதேபோல் ஆஃப்கானிஸ்தான் அணி இந்திய மண்ணில் விளையாடுவதால், அவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதாக பலரும் கூறுகிறார்கள். அதேபோல் நியூசிலாந்து அணிக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறார்கள்.
சேப்பாக்கம் மைதானம் முன்பை போல் கிடையாது என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அதேபோல் ஆஃப்கானிஸ்தான் அணியின் பேட்டிங் மிகப்பெரிய பிரச்சனையாகும். அவர்களால் 200 ரன்களுக்கு மேல் விளாச முடியுமா என்பது சந்தேகம் தான். பகலிரவு போட்டிகள் அல்லாமல் பகல் நேர போட்டிகளில் விளையாடினால் வெல்ல முடியும்.
ஆஃப்கானிஸ்தான் சிறந்த வளர்ந்து வரும் அணி என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அவர்களாலும் அரையிறுதிக்கு வர முடியாது என்று தெரிவித்துள்ளார். 2024 உலகக்கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி புதிய வரலாறு படைத்தது. அதேபோல் 2023 உலகக்கோப்பை தொடரிலும் சிறப்பாக விளையாடியதால், அதனை தொடரும் என்று நம்பப்படுகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications