Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

India vs Pakistan: பாகிஸ்தானை பதம் பார்த்த இந்தியா.. வெற்றிக்கான முக்கிய காரணங்களே இதுதான்!

Subscribe to Oneindia Tamil

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், (Asia Cup Cricket: India vs Pakistan) இன்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த இந்த போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றியை பெற்றது. இந்திய அணி வெற்றி பெற்றதற்கான முக்கிய காரணங்களை இங்கு பார்க்கலாம்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று நடைபெற்ற போட்டியில் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, இந்திய அணியின் அசத்தலான பந்துவீச்சை எதிர்கொள்வதில் தடுமாறியது. சீரான இடைவெளியில் அந்த அணி விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் ரன் ரேட் மந்தமானது.

asia-cup-cricket-india-defeats-pakistan-by-7-wickets-key-reasons-for-the-win

இந்தியா பாகிஸ்தான் மேட்ச்

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பர்ஹான் 40 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒரு வீரரும் அரைசதம் விளாசவில்லை. இந்திய அணியில் பும்ரா மற்றும் அக்சர் தலா 2 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு சுப்மான் கில் 10 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ், துவக்க வீரர் அபிஷேக் சர்மாவுடன் கை கோர்த்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியின் ரன்வேகம் சீராக அதிகரித்தது.

அசத்தல் வெற்றி பெற்ற இந்தியா

அதே நேரத்தில் 31 ரன்களில் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். அடுத்து வந்த திலக் வர்மா 31 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும், சூர்யகுமார் யாதவ் நிலைத்திருந்து (47 ரன்கள் - ஆட்டமிழக்காமல்) ஆடினார். இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றியை பெற்றது.

இந்திய அணி வெற்றி பெற்றதற்கான முக்கிய காரணங்கள்:

பந்துவீச்சு பலம்:

பாகிஸ்தான் டாஸ் வென்றாலும், இந்தியா தனது பந்துவீச்சால் அந்த அணியின் பேட்ஸ்மேன்களை ரன்கள் அடிக்க விடாமல் கட்டுப்படுத்தியது. குறிப்பாக குல்தீப் யாதவ், அக்சர் படேல், பும்ரா ஆகியோரின் பந்து வீச்சை கணித்து ஆட முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் தடுமாறினர்.

பாகிஸ்தான் ரன் வேகம் மந்தம்:

இதனால் பாகிஸ்தான் அணியின் ரன் வேகம் கட்டுப்படுத்தப்பட்டதோடு, விக்கெட்டுகளும் தொடர்ந்து வீழ்ந்தன. பாகிஸ்தான் அணி 127 ரன்களில் சுருண்டது. 20 ஓவர் போட்டிகளில் தற்போது 127 ரன்கள் என்பது பெரிய இலக்காகக் கருதப்படுவதில்லை; 200 ரன்களையும் கூட அநாயாசமாக சேஸ் செய்கிறார்கள்.

பேட்டிங் நம்பிக்கை:

பாகிஸ்தான் குறைந்த ஸ்கோர் செய்தவுடன் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நம்பிக்கை வந்தது. இதனால், பதற்றமின்றி பேட்டிங் செய்தனர். கில் அவுட் ஆனாலும், சூர்யகுமார் யாதவ் பொறுப்புடன் ஆடினார். பந்துக்கு ஏற்ற ரன்களையே அடித்தாலும் அவர் நிலைத்திருந்தது இந்திய அணிக்கு பலமாக இருந்தது.

பாகிஸ்தான் பந்து வீச்சு தோல்வி:

பாகிஸ்தான் வீரர்கள் எவ்வளவு முயன்றும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரிதாக நெருக்கடி கொடுக்கவில்லை. பாகிஸ்தானின் சாயிம் ஆயுப் மட்டும் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அப்ரார் அகமது கட்டுக்கோப்பாக பந்து வீசியது (4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டும் விட்டு கொடுத்தார்).

ஷாஹீன் அப்ரிடியின் தவறுகள்:

ஷாஹீன் அப்ரிடி தவறுகள் செய்து இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பை தேடித் தந்தது. அவர் ரன்களை அள்ளி வழங்கினார். குறிப்பாக அவர் வீசிய 2 ஓவர்களில் 23 ரன்கள் விட்டு கொடுத்தார். கடுமையான அழுத்தத்திலும் இந்தியா சிறப்பாக விளையாடி வெற்றியைப் பெற்றது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+