சரியாக உலகக் கோப்பை பைனலுக்கு முன்.. இந்திய அணிக்கு வந்த பெரிய கெட்ட செய்தி.. அட இவரா? போச்சே!
சென்னை: இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் பைனல் நடக்கும் முன்பே இந்திய அணிக்கு கெட்ட செய்தி ஒன்று வந்துள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பைனல் உலகக் கோப்பை போட்டி நாளை மறுநாள் நடக்க உள்ளது. இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் உச்சத்தை எட்டி உள்ளது. வரிசையாக எல்லா போட்டிகளும் வென்றுவிட்டு இந்திய அணி கடைசி போட்டியிலும் வென்றுவிட்டால் 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை வென்றுவிடும்.

இந்த முறை இந்திய அணி முழு பார்மில் இருக்கிறது. மற்ற அணிகளை விட வலுவாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவை விட வலுவான பேட்டிங் மற்றும் பவுலிங் ஆர்டர் இந்திய அணிக்கு உள்ளது. இதனால் இந்திய அணிக்கு வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
நல்ல செய்தி; பைனல் நடக்கும் முன்பே இந்திய அணிக்கு கெட்டசெய்தி ஒன்று வந்துள்ளது. அதன்படி இந்த போட்டியில் இருக்க போகும் நடுவர்கள் யார் என்ற லிஸ்ட் வெளியாகி உள்ளது. கள நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வொர்த் & ரிச்சர்ட் கெட்டில்பெர்க் மூன்றாவது நடுவர்: ஜோயல் வில்சன் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரீச்சர்ட் கெட்டில்பெர்க் இந்த போட்டியில் நடுவராக இருப்பது நெட்டிசன்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2019 உலகக் கோப்பை செமி பைனலில் இவர் நடுவராக இருந்த போதுதான் இந்திய அணி தோல்வி அடைந்தது. இவர் அம்பயராக வந்த போதுதான் உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான செமி பைனல் போட்டியில் தோல்வி அடைந்தது. அப்போதும் வெறும் 2 ரன்னுக்கு இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்தது .
கடந்த முறை ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மேட்சில் இவர் நடுவராக இருந்த போது இந்திய அணியின் டாப் ஆர்டர் கடுமையாக திணறியது. ரீச்சர்ட் கெட்டில்பெர்க் நடுவராக இருந்த போதெல்லாம் இந்தியா வீழ்ந்து உள்ளது. ரிச்சர்ட் கெட்டில்பரோ - இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய கெட்ட கனவாக மாறி உள்ளார். இதற்கு முன் இவர் நடுவராக இருந்த போது பின்வரும் போட்டிகளை இந்தியா இழந்தது.
• 2015 WC அரையிறுதி.
• 2016 WC அரையிறுதி.
• 2017 CT இறுதிப் போட்டிகள்.
• 2019 அரையிறுதி.
• 2021 PAKக்கு எதிராக.
• 2023 WTC இறுதிப் போட்டிகள்.
• 2023 WC (இன்று).
இவரை வைத்து நெட்டிசன்கள் பலரும் கூட இப்போது மீம்ஸ் போட்டு வருகின்றனர். அவர்தான் இந்திய அணிக்கு பெரிய கெட்ட சகுனம். அவர் வரும் மேட்ச் எல்லாம் இப்படித்தான் நடக்கிறது என்று மீதம் போட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான் இந்த முறை செமி பைனலில் அவர் இல்லாதது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.
2023 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணியை செமி பைனலில் கொண்டது. அப்போது ரீச்சர்ட் கெட்டில்பெர்க் நடுவராக இல்லை என்பது பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அவர் இல்லை என்று நெட்டிசன்கள் சந்தோசம் அடைந்தனர். ஆனால் பைனல்ஸ் போட்டியில் அவர் நடுவராக நியமிக்கப்பட்டு இருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த முறை பைனலுக்கு 10 முறை தொடர் வெற்றிகளோடு இந்தியா சென்றுள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவை ஒருமுறை இந்தியா இந்த தொடரில் வீழ்த்தியும் விட்டது. இந்திய அணி எப்போதுமே லீக் ஆட்டங்களில் நன்றாக ஆடி உள்ளது. ஆனால் செமி, பைனல் போன்ற நாக் அவுட் போட்டிகளில் தோனிக்கு பின்பாக எந்த கேப்டனும் சரியாக ஆடவில்லை. அந்த அழுத்தம் இப்போதும் இந்திய அணிக்கு இருக்கும். அதை சரி செய்ய இந்திய அணி கஷ்டப்பட வேண்டும். இதுவே பெரிய அழுத்தத்தை இந்திய வீரர்களுக்கு கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications