உலகக்கோப்பை கிரிக்கெட்டில் மெகா ஊழல்.. குமுறும் ரசிகர்கள்! இப்படி தலைகுனிய வெச்சுட்டாங்களே?
சென்னை: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்காக இன்று உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், இந்த தொடரில் நடைபெற்ற மெகா ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
2023 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. அகமதாபாத் தொடங்கி, சென்னை, கொல்கத்தா, டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் என பல நகரங்களில் இப்போட்டி நடைபெற்றது. அனைவரும் எதிர்பார்த்ததற்கு ஏற்ப இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் கம்பீரமாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. 2003 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய ஆஸ்திரேலியாவை மீண்டும் இன்றைய இறுத் போட்டியில் நமது வீரர்கள் எதிர்கொள்கிறார்கள்.

குஜராத்தின் அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி நடைபெற உள்ளது. இதற்காக பல மாநிலங்கள், நாடுகளை சேர்ந்த ரசிகர்கள் அகமதாபாத் நகரில் குவிந்து உள்ளார்கள். பிரதமர் மோடி தொடங்கி, பல அரசியல் கட்சித் தலைவர்கள், ஆஸ்திரேலிய துணை பிரதமர், மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பலர் கலந்துகொள்கிறார்கள். இறுதிப் போட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், உலகக்கோப்பை தொடரில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டி தொடங்கி பல மைதானங்கள் நடைபெற்ற போட்டிகளில் இருக்கைகள் காலியாக இருந்தது சர்ச்சைக்கு உள்ளானது. மறுபக்கம் இந்திய அணி விளையாடிய போட்டிகளுக்கு டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் அலைமோதினர். ஆன்லைன் டிக்கெட்டிகளில் சில நொடிகளில் விற்றுத் தீர்ந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில்தான் டிக்கெட் விற்பனையில் பல கோடிக்கணக்கில் ஊழலும், மோசடியும் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியின் டிக்கெட்டுகளும் இப்படி ஆன்லைனில் விற்றுத் தீர்ந்தன. ஆனால், அகமதாபாத்தின் பல கடைகளில் பல ஆயிரங்கள், லட்சங்களுக்கு கள்ள சந்தையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது. இறுதிப் போட்டியைக் காண அகமதாபாத்துக்கு சென்ற தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் ஒருவர் தனியார் தொலைக்காட்சிக்கு இது குறித்து பேட்டியளித்து உள்ளார்.
அவர் கூறுகையில், "எனக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. பிளாக்கில்தான் வாங்கினோம். இங்கு எல்லா விலையும் அதிகமாக உள்ளது. விமான டிக்கெட் கட்டணம் அதிகம். ஆனால், கிரிக்கெட் மீது கொண்ட ஆர்வம் காரணமாக இதை பார்த்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் வந்து உள்ளோம். என்னுடன் சேர்ந்து நாமக்கலில் 160 பேர் வந்து உள்ளார்கள். பிளாக்கில் ரூ.2 லட்சம் வரை டிக்கெட் விற்கப்படுகிறது. ஒவ்வொரு கடையில் ஒவ்வொரு மாதிரி விற்கிறார்கள். ரசிகரின் வேண்டுகோள் என்னவென்றால் அடுத்த முறை இதுபோல் பிளாக்கில் டிக்கெட் விற்காமல் கவுண்டர் மூலமாகவோ அல்லது வேறு வழியிலோ விற்பனை செய்திடுங்கள்.
இவ்வளவு பணம் கொடுத்தாவது கண்டிப்பாக போட்டியை பார்க்க வேண்டும். இதற்கு முன் இந்தியா - ஆஸ்திரேலியா லீக் போட்டியையும் இப்படிதான் அதிக கட்டணம் கொடுத்து டிக்கெட் வாங்கி பார்த்தோம். இந்த உலகக்கோப்பை முழுவதும் பிளாக்கில்தான் டிக்கெட் கிடைக்கிறது. ஆன்லைன் டிக்கெட் என்று சொன்னாலும் அனைத்தும் சில நொடிகளில் விற்கப்பட்டதாக கூறுகிறார்கள். அதுதான் உண்மையான காரணம். எனவே அடுத்த முறை இதற்கு தீர்வு காண வேண்டும்." என்றார்.












Click it and Unblock the Notifications