IND vs NZ: சாம்பியன்ஸ் டிராபி.. மழையால் ஆட்டம் ரத்தானால் கோப்பை யாருக்கு? ஐசிசி விதிகள் சொல்வதென்ன?
துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் நாளை மோதுகின்றன. இந்த போட்டியின் போது மழை பெய்து ஆட்டம் நடத்த முடியவில்லை என்றால், என்ன முடிவு எடுக்கப்படும் என்ற குழப்பம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஐசிசி என்ன விதிகளை வகுத்துள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி நாளை நடக்கவுள்ளது. ஏற்கனவே துபாய் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. அதில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதனால் இம்முறையும் இந்திய அணி வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் நியூசிலாந்து அணி இம்முறை பேட்டிங் மற்றும் பவுலிங்கில் வலிமையாக உள்ளது. அந்த அணியின் கேப்டன் சான்ட்னர் பவுலிங்கில் மிக துல்லியமாக செயல்பட்டு வருகிறார். அதேபோல் பிரேஸ்வெல், கிளென் பிலிப்ஸ் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகிய ஸ்பின்னர்களும் சிறந்த பங்களிப்பை வழங்க கூடியவர்கள். இதனால் 2 அணிகளும் 4 ஸ்பின்னர்களுடன் களமிறங்கும் என்று பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பாக இந்திய அணியை சொந்த மண்ணிலேயே 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றியை பெற்றது. இதனால் இறுதிப்போட்டியில் யார் வெல்வார்கள் என்ற விவாதம் இந்திய ரசிகர்களிடையே தீவிரமாக நடந்து வருகிறது. ஒரு சிலர் நியூசிலாந்து அணிக்கும், பெரும்பாலானோர் இந்திய அணிக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் ஐசிசி இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுக்காது. 2019 உலகக்கோப்பை தொடரில் கடைசி வரை போராடி சூப்பர் ஓவர் முறையில்தான் தோல்வியை சந்தித்தது. இதனால் இந்திய அணி மிகப்பெரிய போராட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே நியூசிலாந்து அணி சரணடையும்.
இதனிடையே நாளை நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் திடீரென மழை பெய்தால் என்ன நடக்கும் என்ற குழப்பம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஒருவேளை நாளைய ஆட்டத்தின் போது மழை பெய்தால், குறைந்தபட்சம் 20 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடக்கும். ஏற்கனவே 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியின் போது மழை பெய்ததால், 20 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக நடத்தப்பட்டது.
ஒருவேளை 20 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்த முடியவில்லை என்றால், ஆட்டம் ரிசர்வ் நாளிற்கு தள்ளி வைக்கப்படும். அப்போது ஆட்டம் முழுமையாக நடத்தப்படும். ரிசர்வ் நாளிலும் இறுதிப்போட்டி முழுமையாக நடக்கவில்லை என்றால், இரு அணிகளுக்கும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை பகிர்ந்து அளிக்கப்படும்.
ஏற்கனவே 2002 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டி மழையால் 2 நாட்களும் முழுமையாக நடத்தப்படவில்லை. இதனால் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது. ஒருவேளை ஆட்டம் சமனில் முடிவடைந்தால், சூப்பர் ஓவர் மூலமாக வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார். சூப்பர் ஓவரிலும் சமன் ஏற்பட்டால், மீண்டும் சூப்பர் ஓவர் முறை பின்பற்றப்படும்.
பவுண்டரி எண்ணிக்கை கொண்டு வெற்றியாளர் தேர்வு செய்யப்பட மாட்டார். அந்த விதியை 2019 உலகக்கோப்பை முடிவடைந்த பின்னரே ஐசிசி திருத்தம் செய்தது. அதேபோல் துபாய் மைதானத்தில் நாளை மழை பெய்வதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications