நேற்று டிஎஸ்கே, ஜேஎஸ்கே.. இன்று சிஎஸ்கே! 3 அணிகளுக்காகவும் விளையாடும் அகீல் ஹொசைன்.. யார் இவர்?
அபுதாபி: ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணிக்காக முதல் வீரராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் அகீல் ஹொசைன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவரை அடிப்படை தொகையான ரூ.2 கோடிக்கு சிஎஸ்கே அணி வாங்கியது. இவர் ஏற்கனவே எஸ்ஏ20 லீக் தொடரில் ஜேஎஸ்கே அணிக்காகவும், எம்எல்சி லீக் தொடரில் டிஎஸ்கே அணிக்காகவும் விளையாடி இருக்கிறார். இதன் மூலமாக பயிற்சியாளர் ஃபிளமிங் மற்றும் அனலிஸ்ட் ஏஆர் ஸ்ரீகாந்த் ஆகியோரின் முடிவாகவே பார்க்கப்படுகிறது.
2026ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் ( IPL Auction ) அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் சிஎஸ்கே அணி இதுவரை 3 வீரர்களை வாங்கியுள்ளது. முதல் வீரராக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடி வரும் அகீல் ஹொசைன் வாங்கப்பட்டுள்ளார். அகீல் ஹொசைன் நீண்ட மாதங்களாகவே சிஎஸ்கே அணியின் ரசிகர்களால் உச்சரிக்கப்பட்டு வரும் பெயர்தான்.

குறிப்பாக அனலிஸ்ட் பிரசன்னாவின் முதல் கணிப்பாக இது இருந்தது. நிச்சயமாக ஜடேஜாவின் இடத்தில் அகீல் ஹொசைன் விளையாட வைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறி இருந்தார். ஏற்கனவே எஸ்ஏ20 லீக் தொடரில் ஜேஎஸ்கே அணிக்காகவும், எம்எல்சி லீக் தொடரில் டிஎஸ்கே அணிக்காகவும் விளையாடி இருக்கிறார். பயிற்சியாளர் ஃபிளமிங்கின் கண்காணிப்பில் ஆடியவர்.
அதேபோல் என்ன பிட்சில் எப்படி பவுலிங் செய்ய வேண்டும் என்ற நுணுக்கத்துடன் செயல்படும் திறன் அகீல் ஹொசைனுக்கு அதிகமாக உள்ளது. இன்னும் சொல்லப் போனால் தோனி, ஹர்திக் பாண்டியாவை போல் ஸ்ட்ரீட் ஸ்மார்ட் வீரர். கீழ்வரிசை பேட்டிங்கில் அதிரடியாக விளையாட கூடிய வீரர் என்பதால், அகீல் ஹொசைனை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்திருக்கிறது.
இதற்கு முன்பாக ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடி இருந்தாலும், முழுமையாக திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் சிஎஸ்கே அணி அகீல் ஹொசைனின் திறமையை பயன்படுத்திக் கொள்ளும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஆடும் வீரர்கள் சிஎஸ்கே அணியில் பட்டையை கிளப்புவார்கள். இதனால் அகீல் ஹொசைன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications