சிஎஸ்கே வெற்றிக்கு 4 வீரர்கள் முக்கியம்.. பஞ்சாப் அணியின் ஒரே பலவீனம்! செய்வாரா ருதுராஜ் கெய்க்வாட்?
சென்னை: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி நூர் அஹ்மத் மற்றும் ராகுல் சஹர் ஆகிய இரு ஸ்பின்னர்களுடன் களமிறங்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதேபோல் சஞ்சு சாம்சன் மற்றும் சிவம் துபே ஆகியோரின் பேட்டிங் பங்களிப்பு முக்கியம் என்றும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாட உள்ளது. ஏற்கனவே பஞ்சாப் அணி அசத்தலான வெற்றியை பெற்றுவிட்ட சூழலில், சிஎஸ்கே அணி ராஜஸ்தான் அணியிடம் படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி முதல் போட்டியில் களமிறங்க உள்ளது.

இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியை ஒப்பிடும் போது பஞ்சாப் அணியின் பலம் மற்றும் அனுபவம் உச்சத்தில் இருக்கிறது. இதனால் பஞ்சாப் அணியை வீழ்த்த சிஎஸ்கே அணி கொஞ்சம் நிதானமாகவும், சுதாரிப்புடனும் செயல்பட வேண்டிய தேவை உள்ளது. குறிப்பாக பஞ்சாப் அணியில் சாஹல் மட்டுமே ஒரே ஸ்பின்னராக இருக்கிறார். ஹர்ப்ரீத் ப்ரார் இம்பேக்ட் பிளேயராக வந்தாலும், அவர்களை அட்டாக் செய்ய வேண்டும்.
சேப்பாக்கம் பிட்சில் ஸ்பின்னர்களை அட்டாக் செய்தாலே, பாதி வெற்றியை உறுதி செய்துவிடலாம். அதேபோல் சிஎஸ்கே அணியில் ஸ்பின்னர்களை விளாசுவதற்கு ஏராளமான வீரர்கள் இருக்கிறார்கள். ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சிவம் துபே ஆகிய மூவருமே கொஞ்சம் நிதானம் காட்டி பவர் பிளேவுக்கு பின் வெளுத்து கட்ட வேண்டும்.
அதேபோல் அனுபவ வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய இருவரும் முதல் 7 ஓவர்களில் நல்ல ஸ்கோரை பதிவு செய்துவிட்டு பேட்டிங்கை இளம் வீரர்கள் கையில் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் சிஎஸ்கே அணியின் இளம் வீரர்கள் அடித்து நொறுக்க சரியாக இருக்கும். இல்லையென்றால் அழுத்தத்தில் விக்கெட்டை பறிகொடுக்க வாய்ப்புகள் உள்ளது.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது. ஒரே போட்டியில் சிஎஸ்கே பிளேயிங் லெவனில் மாற்றங்கள் செய்யப்பட்டால், இளம் வீரர்கள் மனதில் குழப்பம் ஏற்படும். பிளேயிங் லெவனில் இருப்போமா மாட்டோமா என்ற குழப்பத்திலேயே இந்த சீசனில் ஆட்டம் சுணங்கிவிடும் என்று பார்க்கப்படுகிறது.
அதேபோல் சிஎஸ்கே அணியின் ஸ்பின்னர்களான நூர் அஹ்மத் மற்றும் ராகுல் சஹரை சரியாக பயன்படுத்த வேண்டும். இம்பேக்ட் பிளேயராக ராகுல் சஹரை கொண்டு வந்து, கொஞ்சம் ஆட்டம் காட்டினாலே பஞ்சாப் அணியின் பேட்டிங் ஆர்டரை கட்டுப்படுத்திவிடலாம். இதனால் சிஎஸ்கே வெற்றி ருதுராஜ் கெய்க்வாட் கைகளில் தான் உள்ளதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications