சிஎஸ்கே அணிக்கு தலைவலியாக மாறிய தல தோனி.. அங்கேயே தோற்றுவிட்டார்.. புலம்பும் மஞ்சள் பாய்ஸ்!
சென்னை: 18வது ஐபிஎல் தொடருக்கான 17வது லீக் போட்டியில் டெல்லி அணியிடம் 25 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. டெல்லி அணி நிர்ணயித்த 184 ரன்கள் என்ற இலக்கை சேஸிங் செய்ய முடியாமல் 158 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்திருக்கிறது. இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் 3வது தோல்வி இதுவாகும்.
ஹாட்ரிக் தோல்வியை அடைந்திருப்பதால், சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சேப்பாக்கம் மைதானத்தை சிஎஸ்கே அணி தனது கோட்டையாக வைத்திருந்த நிலையில், அடுத்தடுத்து 2 தோல்வியை அடைந்திருக்கிறது. இதனால் ரசிகர்கள் விரக்தியடைந்திருக்கின்றனர்.

தோனியின் பேட்டிங்
இந்த சீசனில் தோனியின் பேட்டிங் சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய சிக்கலாக உருவாகி இருக்கிறது. ஏனென்றால் ஜடேஜா டி20 கிரிக்கெட்டில் பேட்ஸ்மேனாக பெரிய பங்களிப்பை அளித்ததில்லை. தற்போது தோனியும் பெரிய ரன்களை அடிக்க முடியாமல், நம்பர் 6 அல்லது நம்பர் 7 பேட்டிங் வரிசையில் களமிறங்கி வருகிறார்.
நேஹல் வதேரா - தோனி
என்னதான் தோனி சில சிக்சர்களை அடித்தாலும், களமிறங்கிய முதல் பந்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை ஆடக் கூடிய பேட்ஸ்மேன் இல்லாமல் சிஎஸ்கே அணி தவிக்கிறது. அதேபோல் ரூ.4 கோடிக்கு தோனியை போல் ஆடக் கூடிய பேட்ஸ்மேன் வைத்திருப்பது சிஎஸ்கே அணிக்கு சாதகம் என்றே வாதமே அடிபடுகிறது. ஏனென்றால் நேஹல் வதேரா போன்ற வீரர்களை பஞ்சாப் அணி ரூ.4.20 கோடிக்கு வாங்கி வைத்திருக்கிறது.
சிஎஸ்கே தலைவலி
நேஹல் வதேரா நேற்றைய ஆட்டத்தில் கடைசி 5 ஓவர்களில் 75 ரன்கள் தேவை என்ற போதும், வெற்றிக்காக போராடுகிறார். ஆனால் தோனியோ 30 பந்துகளுக்கு 75 ரன்கள் அடிக்க முடியாது என்ற மனநிலையில் களமிறங்கி ரன் ரேட்டுக்காகவே ஆடுகிறார். அதுதான் சிஎஸ்கே அணியின் மிகப்பெரிய தலைவலியாக அமைந்துள்ளது.
சரண்டராகும் சிஎஸ்கே
தோல்வியடைந்தாலும் கெத்தாக போராடி தோற்காமல், கடைசி வரை களத்தில் நின்று ஒருநாள் கிரிக்கெட்டை போல் தோனி ஆடுவதே மிகப்பெரிய சிக்கலாக உள்ளது. இதனால் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்கள் சேர்த்தால் மட்டுமே சிஎஸ்கே அணியால் வெற்றி பெற முடியும் என்ற நிலை உள்ளது. இதன் காரணமாக சிஎஸ்கே அணி இம்முறை மோசமான தோல்விகளை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications