சிஎஸ்கே அணியின் பிடிவாதம்.. அஸ்வினால் சென்னை அணிக்கு நேர்ந்த இழப்பு.. இனியாவது திருந்துவார்களா?
சென்னை: 18வது ஐபிஎல் தொடரின் நாளைய ஆட்டத்தில் டெல்லி அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடவுள்ளது. ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சிஎஸ்கே அணி அடுத்தடுத்து தோல்வியை சந்தித்துள்ளது. இந்த நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றிப் பாதைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போட்டியில் வலிமை வாய்ந்த டெல்லி அணியை வீழ்த்தினால், சிஎஸ்கே அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் சொந்த மண்ணில் வெற்றிபெறுவதற்கான ஃபார்முலாவையும் சிஎஸ்கே அணியால் கண்டறிய முடியும் என்று பார்க்கப்படுகிறது. ஆனால் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு ரவிச்சந்திரன் அஸ்வினே காரணமாக இருந்து வருகிறார்.

அஸ்வினால் சிக்கல்
ஏனென்றால் சிஎஸ்கே அணியில் ஜடேஜா, நூர் அஹ்மத் மற்றும் அஸ்வின் என்று 3 தலைசிறந்த ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். இதில் ஜடேஜா மற்றும் நூர் அஹ்மத் கட்டுப்பாடாக பவுலிங் செய்ய, அஸ்வின் எளிதாக ரன்களை விட்டுக் கொடுக்கிறார். அவருக்கு பதிலாக ரச்சின் ரவீந்திராவை வைத்து 2 ஓவர்களை நிரப்பினாலே, சிஎஸ்கே அணியால் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை விளையாட வைக்க முடியும்.
ஸ்பின்னர்களுக்கு கொடுத்த விலை
அதுமட்டுமல்லாமல் மெகா ஏலத்திலேயே சிஎஸ்கே அணி மிகப்பெரிய தவறை செய்திருக்கிறது. ஏனென்றால் ஏற்கனவே ஜடேஜா ரூ.18 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் நூர் அஹ்மத்தை வாங்குவதற்கு ரூ.10 கோடி செலவு செய்தது. அதேபோல் அஸ்வினையும் வாங்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்த சிஎஸ்கே அணி ரூ.9.75 கோடிக்கு வாங்கியது.
சிஎஸ்கேவின் தவறான முதலீடு
இதன் மூலமாக 3 ஸ்பின்னர்களுக்கு மட்டும் சிஎஸ்கே அணி சுமார் ரூ.38 கோடியை செலவு செய்திருக்கிறது. ஒருவேளை அஸ்வினுக்கு பதிலாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனை வாங்குவதற்கு முதலீடு செய்திருக்கலாம். ஏனென்றால் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சிவம் துபே ஆகிய இருவரை தவிர்த்து சிஎஸ்கே அணியில் சிறந்த பேட்ஸ்மேனே இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது.
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்
ராகுல் திரிப்பாட்டி, தீபக் ஹூடா உள்ளிட்டோரை விடவும் டேவிட் மில்லர், அஷுதோஷ் சர்மா, ஜித்தேஷ் சர்மா, ரகுவன்ஷி போன்ற பேட்ஸ்மேன்களை வாங்கி இருக்கலாம். இத்தனைக்கும் கேகேஆர் அணி முதலில் ரகுவன்ஷியை மெகா ஏலத்தில் தவிர்த்திருந்தது. அவரை வாங்கி இருந்தால் கூட சிஎஸ்கே அணியின் பேட்டிங் வலிமையாக இருந்திருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
சிஎஸ்கேவின் பிடிவாதம்
இதனால் அஸ்வினை வாங்க வேண்டும் என்ற பிடிவாதமே சிஎஸ்கே அணியின் காம்பினேஷனை உடைத்திருக்கிறது. இதனால் அஸ்வினை முறையாக பயன்படுத்த சிஎஸ்கே அணி ஆலோசிக்க வேண்டும். அப்படியில்லை என்றால், அஸ்வினை பெஞ்சில் அமர வைத்து, அவருக்கு பதிலாக வன்ஷ் பேடி, ஷேக் ரஷீத் போன்ற பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று விமர்சிக்கப்படுகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications