மீண்டும் 2 மாற்றங்கள்.. மகாராஷ்டிரா பாசத்தை காட்டிய ருதுராஜ்.. கேப்டன் கைகளுக்குள் சிஎஸ்கே அணி!
சென்னை: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் மீண்டும் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிஎஸ்கே அணி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள பிளேயிங் லெவனில் கான்வே மற்றும் முகேஷ் சவுத்ரி கொண்டு வரப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் தொடரின் 17வது லீக் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், பிளேயிங் 12ல் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
முன்னதாக இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி களமிறங்குவார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் டாஸ் போடுவதற்கு முதல் ஆளாக ருதுராஜ் கெய்க்வாட் களம் புகுந்தார். இதன் மூலமாக தோனி ஓய்வு குறித்து பேச்சுகளும், ருதுராஜின் காயம் தொடர்பான பேச்சுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
ருதுராஜ் கையில் சிஎஸ்கே
அதேபோல் சிஎஸ்கே அணியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டிருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சிஎஸ்கே அணிக்கு தோனி கேப்டனாக இருந்த வரை, பிளேயிங் லெவனில் பெரிய மாற்றங்கள் இருக்காது. ஒரு வீரர் காயமடைந்தால் மட்டுமே தோனி மாற்று வீரரை கொண்டு வருவார். ஷேன் வாட்சன் போன்ற வீரர் தொடர்ந்து 5 போட்டிகளில் சொதப்பிய போதும், வாய்ப்புகளை அளித்தார்.
தோனியின் ஸ்டைல்
ஒரு வீரரின் மீது நம்பிக்கை வைத்தால், அந்த வீரரே போதும் என்று சொல்லும் வகையில் தோனி வாய்ப்புகளை வாரி வழங்குவார். ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் ஒவ்வொரு போட்டியிலும் மாற்றங்களை செய்து கொண்டே இருக்கிறார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஜேமி ஓவர்டன் மற்றும் ராகுல் திரிப்பாட்டி ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
மகாராஷ்டிரா பாசம்
இந்த போட்டியில் அவர்கள் இருவரையும் நீக்கிவிட்டு கான்வே மற்றும் முகேஷ் சவுத்ரி சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அதாவது மகாராஷ்டிரா அணிக்காக ஆடும் ராகுல் திரிப்பாட்டியை நீக்கிவிட்டு, மற்றொரு மகாராஷ்டிரா வீரரான முகேஷ் சவுத்ரிக்கு ருதுராஜ் வாய்ப்பு வழங்கி இருக்கிறார். இதன் மூலமாக ருதுராஜ் கெய்க்வாட் கைகளுக்குள் சிஎஸ்கே அணி வந்துவிட்டதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் 2வது போட்டிக்கு பின் ஒவ்வொரு போட்டியிலும் ருதுராஜ் கெய்க்வாட் மாற்றங்கள் செய்து வருகிறார்.












Click it and Unblock the Notifications