சாப்பிட காசு இல்ல.. வீடு, நிலம் எல்லாமே போயிருச்சு.. CSK வீரர் கார்த்திக் சர்மாவின் தந்தை சொன்ன கதை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிஎஸ்கே அணியால் ரூ.14.2 கோடிக்கு வாங்கப்பட்டுள்ள இளம் வீரர் கார்த்திக் சர்மா கடந்து வந்த பயணம் தொடர்பாக அவரின் தந்தை பகிர்ந்துள்ள சம்பவங்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார்த்திக் சர்மாவின் கனவுக்காக வீடு, நிலம், பொருள் என்று அத்தனையையும் தங்களின் குடும்பம் இழந்ததாக கூறி இருக்கின்றனர்.

சிஎஸ்கே அணி தரப்பில் 19 வயதான இளம் வீரரான கார்த்திக் சர்மாவை ரூ.14.2 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். ரஞ்சி டிராபியில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் விக்கெட் கீப்பர் கார்த்திக் சர்மா, மிடில் ஆர்டரில் அதிரடியாக ரன்களை விளாசக் கூடியவர். தோனியின் இடத்தை சஞ்சு சாம்சனை விடவும் கார்த்திக் சர்மாவை வைத்து நிரப்பலாம் என்பதே சிஎஸ்கே அணியின் மறைமுக திட்டமாக உள்ளது.

CSK

இந்த ஐபிஎல் தொடரில் தோனி இல்லாமல் கார்த்திக் சர்மா தொடங்க அதிக வாய்ப்புகள் உள்ளது. சிஎஸ்கே அணிக்காக கார்த்திக் சர்மா ஒப்பந்தம் செய்யப்பட்ட போது, அவரின் குடும்பத்தினர் அத்தனை பேரும் டான்ஸ் ஆடி கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிலையில் கார்த்திக் சர்மா கடந்து வந்த பாதை தொடர்பாக அவரின் தந்தை மனோஜ் பகிர்ந்துள்ளார்.

அதில் மனோஜ் பேசுகையில், எங்கள் குடும்பத்திற்கு போதிய வருமானம் கிடையாது. ஆனால் எனக்கும் என் மனைவிக்கும் ஒரு கனவு இருந்தது. அது எங்கள் மகன் கார்த்திக் சர்மாவை கிரிக்கெட் வீரராக மாற்றுவதுதான். அதற்காக எந்த இழப்பையும் சந்திக்க தயாராக இருந்தோம். முதலில் மனைவியின் நகையை விற்றோம். பின்னர் வீடு கட்டுவதற்காக வைத்திருந்த நிலத்தை விற்றோம்.

ஒரு கட்டத்தில் விவசாய நிலத்தையும் விற்பனை செய்தோம். அந்த தருணங்கள் எங்கள் வாழ்க்கையின் சவாலான காலமாக அமைந்தது. ஆனால் ஒருநாளும் கார்த்திக் சர்மாவின் கிரிக்கெட் கனவை கைவிடவில்லை. ஒருமுறை குவாலியரில் நடக்கும் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க சென்றிருந்தோம். அப்போது 4 முதல் 5 ஆட்டங்கள் வரைதான் எங்கள் அணி செல்லும் என்று நினைத்திருந்தோம்.

ஏனென்றால் அத்தனை போட்டிகளில் விளையாட மட்டுமே எங்களிடம் பணம் இருந்தது. தங்குமிடம், சாப்பாடுக்கு பணம் இருக்கவில்லை. ஆனால் கார்த்திக் ஆடிய அணி எதிர்பாராத விதமாக இறுதிக்கு முன்னேறிவிட்டது. அதனால் கையில் பணம் இல்லாமல் சாப்பிடாமல் ஒருநாள் இரவு முழுக்க சாலையில் இருந்த நிழற்குடையில் தங்கினோம். பசியுடன் கார்த்திக் சர்மா இருந்தார்.

அந்த இறுதிப்போட்டியில் வென்றபின் தான் எங்களுக்கு பணம் கிடைத்தது. அதன் மூலமாகவே சொந்த ஊருக்கு வந்தோம். அதேபோல் கார்த்திக் சர்மா 2.5 வயதிலேயே பேட்டை கையில் எடுத்து எங்கள் வீட்டில் இருந்த சில கண்ணாடி ஃபிரேம்களை நொறுக்கிவிட்டார். அந்த நேரத்தில் எனக்குள் என் மகன் ஸ்பெஷல் என்று தோன்றியது. என் கனவை கார்த்திக் நிறைவேற்றுவான் என்று நம்பினேன். தற்போது 12ஆம் வகுப்பு முடித்துவிட்டான். இனி கிரிக்கெட் மற்றும் கல்லூரி படிப்பு இரண்டையும் தொடர்வான் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+